ஜன.31: மக்கா மஸ்ஜித், மாலேகான் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளின் முக்கிய பங்காளி சுவாமி அசீமானந்தா, தனக்காக வாதாடுவதற்கு பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அனுப்பிவைத்த காவி வக்கீல்களை ஏற்க மறுத்துவிட்டார். அரசுத் தரப்பு வக்கீலே எனக்கு போதும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜஸ்தான் ஏ.டி.எஸ். கூடுதல் பொறுப்பாளர் எஸ்.எஸ்.ரனாவாத் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் அனுப்பிய ஒரு வக்கீல் குழு அசீமானந்தை உதவிக்காக அணுகியதாகவும், ஆனால் அதை அசீமானந்த் ஏற்க மறுத்து விட்டதாக தெரிவித்தார்.
தேவை ஏற்படும் சமயத்தில், அரசு தரப்பிலிருந்து ஒரு வக்கீலை தானே கேட்டுப் பெருவேன் என்பதாக அசீமானந்த் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ். வக்கீல் இதைபற்றி தெரிவிக்கையில், தாங்கள் சட்ட உதவி அளிப்பதற்காக அசீமாந்த்தை அணுகினோம் ஆனால் அதை அவர் ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதாகத் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment