உலக கோப்பை கிரிகெட்க்கு இன்னும் நாட்களே 18 உள்ள சூழ்நிலையில் நாம் பழைய உலக ரெக்கார்ட் பெற்ற அணிகளையும், அதன் தலைவர்களையும் பற்றி பார்ப்போம். மூன்று உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு தலைமையேற்று வழிநடத்தியவர் என்ற பெருமைக்குரியவர் முன்னாள் வீரரான ஸ்டீபன் பிளெம்மிங். 1999, 2003, 2007 ஆகிய உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு பிளெம்மிங்தான் கேப்டனாக இருந்தார். இவர் தலைமையின் கீழ் 27 ஆட்டங்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, 16 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. 10 ஆட்டங்களில் தோற்றுள்ளது. ஓர் ஆட்டத்துக்கு முடிவு தெரியவில்லை.
இவருக்கு அடுத்தபடியாக முகமது அசாருதீன் மூன்று உலகக் கோப்பையில் (1992, 1996, 1999) இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையின் கீழ் 23 ஆட்டங்களில் இந்தியா விளையாடியுள்ளது. 10 ஆட்டங்களில் வெற்றியும், 12 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்துள்ளது. ஓர் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
இம்ரான்கான் தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி மூன்று உலகக் கோப்பையில் (1983, 1987, 1992) பங்கேற்றுள்ளது. 22 ஆட்டங்களில் விளையாடி 14 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 8 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. 1992-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்த பெருமை மிக்க கேப்டன் இம்ரான்கான்.
இரண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கு (2003, 2007) தலைமையேற்று இரண்டு முறையும் கோப்பையை வென்று சாதனை படைத்தவர் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங். இவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 22 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. உலகக் கோப்பை ஆட்டங்களில் தோல்வியே காணாத பெருமை மிக்க ஒரே கேப்டன் பாண்டிங்தான்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மூன்று உலகக் கோப்பையில் (1975, 1979, 1983) தலைமை தாங்கியவர் கிளைவ் லாயிட். முதல் இரண்டு உலகக் கோப்பையையும் வென்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு பெருமை சேர்த்தவர். இவரது தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் 17 ஆட்டங்களில் விளையாடி 15 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. இரண்டில் தோல்வியடைந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Most of the blogger are in the mode of boycotting cricket in coming days.
Post a Comment