Jan 30, 2011
பிரபாகரன் தலைமையில் மீண்டும் இலங்கையில் போர் வெடிக்கும்!!!
ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வர வில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும். நம் கண் முன்னே தமிழ் ஈழம் மலரும் என்று வைகோ தெரிவித்துள்ளார். பிரபாகரன் உயிருடன் வருவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் என்று வைகோ கூறினார். இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தை மறக்க முடியாது. இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்கள் குடிய மர்த்தப்பட்டு வருகிறார்கள். 300 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் 50 பேருக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படுகிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும். நம் கண் முன்னே தமிழ் ஈழம் மலரும். இவ்வாறு வைகோ பேசினார். உலக தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment