பொதுமக்கள் போராட்டம் எதிரொலி எகிப்தில் மந்திரி சபை கலைப்பு. பதவி விலக அதிபர் மறுப்பு. எகிப்தில் ஹோஸ்னி முபாரக் அதிபராக உள்ளார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளார். அவர் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் கெய்ரோவிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சமாதான நோபல் பரிசு பெற்ற மொகமது எல்பராதேய் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை அடக்க தலைநகர் கெய்ரோ உள்பட நாடு முழுவதும் நேற்று முன் தினம் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தும் அதையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் இரவு முழுவதும் வீதிகளில் போராட்டம் நடத்தினார்கள். 2 அரசு அலுவலகங்களில் புயலென புகுந்து அடித்து நொறுக்கினார்கள். போராட்டக்காரர்களை அடக்க போலீசாரும், ராணுவமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போராட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இது வரை 26 பேர் பலியாகி உள்ளனர்.
நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.இருந்தும் போராட்டம் ஓய்ந்த பாடில்லை. கெய்ரோ, ஆயஷ், அலெக்சாண்டிரியா மற்றும் பல நகரங்களில் தொடர்ந்து நடக்கிறது.
இதை தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் அதிபர் முபாரக் பணிந்தார். தற்போதுள்ள தனது மந்திரி சபையை டிஸ்மிஸ் செய்து கலைத்து விட்டார். புதிய காபினெட் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் அதிபர் பதவியில் இருந்து விலக மறுத்து விட்டார்.
நாட்டில் நிலவும் வன்முறையை அடக்க அமைதியை எற்படுத்த பாதுகாப்பை வலுப்படுத்துவதாக உறுதி அளித்துள்ளார். இதற்கிடையே எகிப்தில் அமைதி ஏற்படுத்த அதிபர் முபாரக் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.ஏனெனில் அமெரிக்காவின் நட்பு நாடுகளில் எகிப்தும் என்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக எகிப்துக்கும் அமெரிக்கா நிதி உதவி செய்து வருகிறது. இதற்கிடையே கலவர பூமியாக மாறி உள்ள எகிப்துக்கு தங்கள் நாட்டினர் சுற்றுலா செல்ல வேண்டாம் என இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. இவருக்கு டெலிபோன் பூத் என்ற பெயர் ஏன்? வந்தது என்றால் ஒவ்வொரு விசயத்திற்கும் பணம் கொடுத்தால்தான் பேசுவார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment