![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVmDSpxUy0rBc7PrO0inEwjXNmwApHt604g-POFkvHrKnXXywPHvZSp3h59q24blnlzHC_Ax0189z9kr0SnrHe3Is0D0Kdf1tevnND8CjgQAqNcxgiwmDq_XjzfV07OQtkIWr38bAGr5g/s320/untitled.bmp)
ஆனாலும் இந்த பிரச்சார யுத்தம் காரணமாக “நாம் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லையோ,” என்று சிலருக்கு தோன்றலாம். மீனவர் பிரச்சினையை நாம் கருதுவது போல பிற மாநிலத்தவர் கருதவில்லை என்பதற்கு வட இந்திய ஊடகங்களின் புறக்கணிப்பு ஒரு காரணம்தான். உலக ஊடகங்களில் இது செய்தியாக வரும்படி செய்வதற்கு நாம் இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். ஏனெனில் உலக அளவில் பல நாடுகளில் பல போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. நாம் மீனவர் பிரச்சினையை பேசிய நாட்களில் எகிப்தில் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்துப் பரவி வருகிறது. உலக ஊடகங்களின் பார்வையில் இதுவே இப்போது மையம்.
இணையத்தில் நாம் மற்ற நாட்டவர், மாநிலத்தவர் பிரச்சினை குறித்து எந்த அளவுக்கு கவலைப்படுகிறோமோ, கருத்து ரீதியாக பங்கேற்கிறோமோ அந்த அளவுக்கு நமது பிரச்சினைகளையும் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்தியாவிலேயே காஷ்மீர், தண்டகாரன்யா, வட கிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் அரசு ஒடுக்குமுறை குறித்து தமிழ் பதிவுலகம் அவ்வளவாக கவலைப்பட்டதில்லை. அதே போல உலக பிரச்சினைகள் குறித்தும் அப்படித்தான் பாராமுகமாக இருந்து வருகிறோம்.
இத்தகைய பிரச்சினைகளில் நாம் பங்கேற்று அந்த நாட்டு மக்களகுக்கு நமது ஆதரவை தெரிவிப்பதன் மூலமே அவர்களோடு நாமது நட்புறவை ஆரம்பிக்க முடியும். அதன் போக்கில் நமது பிரச்சினைகளை அவர்களது அக்கறைக்குரியதாக மாற்ற முடியும். மீனவர் பிரச்சினை குறித்த நமது முயற்சி இத்தகைய புரிதலுடன் விரிந்தால் அது ஆரோக்கியமான மாற்றத்தை, வெற்றியை நிச்சயமாக கொண்டுவரும். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினை அனைத்தம் தேசம்,மொழி, மதம் கடந்து இணையும் போதுதான் இந்த உலகில் கேட்பாரின்றி தொடரும் அந்தீகளை வேரோடு அறுக்க முடியும்.
நன்றி : வினவு.
1 comment:
கண்டிக்கப்படவேண்டிய விஷயமே..
http://riyasdreams.blogspot.com/2011/01/tnfisherman.html
Post a Comment