May 23, 2010

மங்களூரு விமான விபத்து விசாரணை உதவிக்கு அமெரிக்க ஆய்வு படையினர் வருகை.


இந்தியாவையே உலுக்கிய மங்களூரு விமான விபத்து தொடர்பாக ஆய்வு நடத்த அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்தியா வருகின்றனர். மங்களூரு விமான விபத்தில் சுக்கு நூறாகிய விமானத்தின் எஞ்சிய பகுதியிலிருந்து நேற்று கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருப்புப் பெட்டி புது டெல்லியில் உள்ள சிவில் விமானக் கட்டுப்பாட்டு இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கருப்புப் பெட்டி ஆய்வு தீவிரமாக மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் இந்திய அதிகாரிகளுக்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் போயிங் விமான அதிகாரிகள் உதவுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: