May 23, 2010

அமெரிக்காவில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டி- நியூசிலாந்து வெற்றி.

புளோரிடா: அமெரிக்காவில் நடந்த முதலாவது டுவென்டி 20 சர்வதேசப் போட்டியில் இலங்கையை 28 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி கண்டது.அமெரிக்காவில் முதல்முறையாக சர்வதேச டுவென்டி 20 கிரிக்கெட் போட்டி புளோரிடாவில் நடந்தது. மொத்தம் 2 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் நியூசிலாந்தும், இலங்கையும் மோதுகின்றன. நேற்று நடந்த முதல் போட்டியில், இலங்கையை 28 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. அமெரிக்கச் சந்தையில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் முயற்சியாக இந்த இரண்டு டுவென்டி 20 போட்டிகள் அங்கு நடைபெறுகின்றன.

லாடர்ஹில், சென்ட்ரல் புரோவர்ட் ரீஜியனல் பார்க்கில் நடந்த இந்தப் போட்டியை 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர். பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் ஒரு குறையாக பிட்ச் அமைந்து விட்டது. உயிரே இல்லாத பிட்ச் ஆக அது இருந்ததால் ரன் எடுக்க வீரர்கள் தடுமாறினர். முதலில் ஆடிய நியூசிலாந்து வீரர்கள் 20 ஓவர்களில் 7 விக்கெட்க்ளை இழந்து 120 ரன்களை எடுத்தனர். பின்னர் விளையாடிய இலங்கை அணி 92 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தப் போட்டியில் மொத்தமே 2 சிக்சர்கள்தான் விளாசப்பட்டன. 2வது போட்டி இன்று நடைபெறுகிறது.

No comments: