May 23, 2010
மங்களூர் விமானவிபத்து:மீட்புப்பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
மங்களூர்:மங்களூரில் கடந்த 22/05/2010 அன்று துபாயிலிருந்து மங்களூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோரமான விபத்திற்குள்ளானது. இதில் 158 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்திற்குள்ளான விமானத்திலிருந்து உயிரிழந்தோரின் சடலங்களை மீட்பது உள்ளிட்ட பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் தீவிரமாக பணியாற்றினர். பாப்புலர் ஃப்ரண்ட்டின் அம்மாவட்ட செயலாளர் இம்தியாஸ் தெரிவிக்கையில்,"சம்பவம் நிகழ்ந்த உடனேயே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் தீயணைப்பு படைவீரர்கள் வருவதற்கு முன்னரே அப்பகுதிக்கு உடனடியாக விரைந்துச் சென்று மீட்புப்பணிகள் முடியும் வரை ஈடுபட்டனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் பல்வேறு குழுக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் விபத்திற்குள்ளான விமானத்திலிருந்து இறந்த உடல்களை மீட்பதில் உதவினர். மேலும் தகவலை தெரிவிப்பது, உணவு, தண்ணீர் வழங்குதல் ஆகிய பணிகளிலும் ஈடுபட்டனர்.
வென்லோக், யெனப்போயா மற்றும் கொலாசா மருத்துவமனைகளிலும் இவர்கள் சேவைப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த மீட்புபணியின் பொழுது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு ஏ.ஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்." என்று அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment