வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் அமைக்கத் திட்டமிட்டுள்ள பிரமாண்ட பிராட்பேண்ட் கட்டமைப்பு 'ஹப்' வசதியை தங்களது நகருக்கு இழுப்பதற்காக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களும் போட்டி போட்டிக் கொண்டு கூகுளுக்கு ஐஸ் வைத்து வருகின்றன.
கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட கூகுள் நிறுவனம், சோதனை ரீதியாக சூப்பர் பாஸ்ட் பிராட்பேண்ட் இன்டர்நெட் கட்டமைப்பை அமைக்க திட்டமிட்டுள்ளது. இது எந்த நகருக்கு வரப் போகிறது என்பதை இதுவரை கூகுள் அறிவிக்கவில்லை.
ஆனால் இந்த அமைப்பை தங்களது நகருக்கு இழுத்து விடுவதற்காக அமெரிக்காவின் 100 நகரங்கள் கடும் போட்டியில் இறங்கியுள்ளன. தங்களது நகரில் இந்த சோதனை ஹப் அமைய வேண்டும் என அவை விருப்பம் தெரிவித்துள்ளன.
இதற்காக பல்வேறு வழிகளில் கூகுளை இம்ப்ரஸ் செய்யும் முயற்சிகளிலும் அவை இறங்கியுள்ளன.
கூகுளின் கடும் போட்டியாளரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள சியாட்டிலையும் கூகுள் ஃபீவர் விடவில்லை. அங்கும் கூட கூகுளின் அதி விரைவு பிராட்பேண்ட் இன்டர்நெட் சோதனை மையத்தை கொண்டு வர பெரும் ஆர்வம் காணப்படுகிறதாம்.
கூகுள் திட்டமிட்டுள்ள இந்த இன்டர்நெட்டின் வேகம், வழக்கமாக உள்ள பிராட்பேண்ட் இன்டர்நெட்டின் வேகத்தை விட 100 மடங்கு அதிவேகமானதாகும்.
இந்தத் திட்டத்தை அமல்படுத்த விரும்பும் நகரங்கள் கடந்த வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம் என கூகுள் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்தே அமெரிக்க நகரங்களுக்கு இடையே இந்தப் போட்டி ஏற்பட்டது.
கான்சாஸின் டொபேகா நகரத்திற்கு கூகுள் என்று பெயர் சூட்டி விட்டனர். இந்த மார்ச் மாதம் முழுவதும் டொபேகா நகரம் கூகுள் என்றே அழைக்கப்படுமாம்.
புளோரிடா மேயரோ இன்னும் ஒரு படி மேலே போய் விட்டார். மேயர் டிக் கிளாப், அபாயகரமான சுறாக்கள் அடங்கிய நீச்சல் தொட்டியில் இறங்கி சாகசம் செய்து காட்டினார். இந்த சாகஸ நிகழ்ச்சியை கூகுளுக்கு சமர்பணம் செய்தார்.
அதே போல மேலும் பல நகரங்களிலும் கூகுள் தினம் கொண்டாடப்பட்டது. மேலும் கூகுள் பெயரை வைத்து பல விதமான கவரும் நிகழ்ச்சிகளில் பல்வேறு நகரங்களும் இறங்கியுள்ளன.
பெரும் காமெடியாக டுலுத் நகர மேயர் டான் நெஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், டுலுத் நகரில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு கூகுள் பைபர் என்று பெயரிடப்படும் என்றும் பெண் குழந்தைகளுக்கு கூகுளெட் பைபர் என்று பெயரிடப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதாவது, ஆண் குழந்தையாக இருந்தால் ராமச்சந்திரன் என்றும், பெண் குழந்தையாக இரு்நதால் ஜெயலலிதா என்றும் மிகத் தீவிரமான அதிமுகவினர் பெயரிடுவதைப் போல!
இவ்வளவு போட்டா போட்டிகள் நடக்கும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் வெற்றியாளரை அறிவிக்கவுள்ளதாம் கூகுள் நிறுவனம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்வரவு சகோதரி. உங்கள் எழுத்து நலம்.
Post a Comment