Jan 15, 2010

தி பெத்தில் மிக உயரமான விமான நிலையம் சீனா கட்டுகிறது


சீனாவின் ஆக்கிரமிப்பு பகுதியான தி பெத்தில் பாம்டா என்ற இடத்தில் ஏற்கனவே ஒரு விமான நிலையம் உள்ளது. இது 4,436 மீட்டர் உயரம் கொண்டது.
இதுதான் உலகிலேயே மிக உயரமான விமான நிலையம் என பெயர் பெற்றது. இந்த நிலையில் தி பெத்தில் மேலும் ஒரு விமான நிலையத்தை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.

இது ஏற்கனவே உள்ள விமான நிலையத்தை விட 102 மீட்டர் கூடுதல் உயரமாக கட்டப்பட்டுள்ளது. அதாவது சுமார் 4500 மீட்டர் உயரத்துக்கு குறையாமல் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, நாக்கூ என்ற இடத்தில் கட்டப்பட உள்ள இந்த விமான நிலையம் உலகிலேயே மிக உயரமான விமான நிலையம் என்ற பெயரை பெறுகிறது. உலகின் கூரை என்று அதற்கு பெயரிடப்பட உள்ளது.

ரூ.1300 கோடி செலவில் இந்த விமான நிலையம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணி அடுத்த ஆண்டு தொடங்கும். தி பெத்தின் மக்கள் தொகை 4 லட்சமாகும். இந்த விமான நிலையம் தி பெத்தின் மைய பகுதியில் உள்ளது.

இதன் அருகே குயின்காய் - திபெத் ரெயில் நிலையம் உள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வர்த்தக மையம் ஏற்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை சீனாவின் ஷிகுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் ரெயில் நிலையம், மற்றும் விமான நிலையம் தொடங்குவதன் மூலம் தி பெத்தின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில்வைத்து கொள்ளும் நோக்கத்தில் சீனா இவற்றை கட்டுவதாகவும் கூறப்படுகிறது.

No comments: