Jan 13, 2010

ஜின்சியாங் பாதுகாப்பிற்கு மிகப்பெரியத் திட்டத்துடன் சீனா

பீஜிங்:ஜின்சியாங் மாகாணத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது என்று கூறி மிகப்பெரிய திட்டத்தை தீட்டியுள்ளது சீனா.

கடந்த ஆண்டு உரூம்கியில் உய்கூர் முஸ்லிம்களுக்கும் சீன ஹான் இனத்தவர்களுக்கு இடையே நடைபெற்ற கலவரத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர். இதனை கருத்தில்கொண்டு இம்மாகாணத்தில் பாதுகாப்புத் திட்டத்திற்காக 4230 கோடி டாலரின் திட்டத்திற்கு ஜின்சியாங் சட்டமியற்றும் சபை அங்கீகாரம் அளித்தது.

திபெத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியாவில் கஷ்மீர் ஆகியவற்றுடன் எல்லையை பங்கிடும் ஜின்சியாங்கின் உண்மையான பெயர் கிழக்குத் துருக்கிஸ்தானாகும். சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு கலாச்சாரத் தாக்குதல்களுக்கு இனப்படுகொலைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள் உய்கூர் முஸ்லிம்கள்.

சீன அரசு 80 சதவீதமிருக்கும் உய்கூர் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ஹான் இனத்தவர்களை குடியமர்த்தி வருகிறது. சீனாவின் இப்புதிய திட்டம் ஜின்சியாங்கில் செயல்படும் சில முஸ்லிம் இயக்கங்களை குறிவைப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: