
பூகம்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டிக்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
உதவி தேவைப்படும் இந்நேரத்தில் இந்தியா ஹைட்டி மக்கள் மற்றும் அரசுக்கு ஆதரவாக இருக்கும். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி மக்களுக்கு இந்தியா உடனடியாக 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ரொக்கமாக வழங்க விரும்புகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமுற்றுள்ளவர்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங், ஹைட்டி பிரதமர் ஜீன் மாக்சுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஹைட்டியில் ஜனவரி 12ஆம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தின் பாதிப்பை அறிந்து நாங்கள் மிகவும் கவலையுற்றோம். ஹைட்டி மக்கள் இந்த இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளிலிருந்து மீளும் வலிமை பெற்றவர்கள் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் பிரதமர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1 comment:
weldon india
Post a Comment