ஹைட்டி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவு கோலில் 7.3 என்று பதிவான இந்த நில நடுக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடம் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிடங்கள் தரைமட்டமாயின. பூகம்பத்தில் சிக்கிய இந்தியர்களின் நிலவரம் என்னவென்று தெரியவில்லை. பல நாடுகளிலிருந்தும் மீட்புப் பணிகளும், உதவிகளும் ஹைட்டி நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment