புதுடெல்லி : மத மற்றும் மொழி சிறுபான்மை மக்களின் பிரச்னைகளை பற்றி ஆராய்வதற்காக ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மத்திய அரசு அமைத்த கமிட்டி, சமீபத்தில் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அதில், மொழி சிறுபான்மை மக்கள் தரமான கல்வியை பெறுவதற்காக நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்தும்படி பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக, உருது மற்றும் பஞ்சாபியை தாய் மொழியாக கொண்டவர்களுக்காக இது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கமிட்டி வலியுறுத்தி இருக்கிறது.
‘மொழி சிறுபான்மை மக்களின் பிள்ளைகள் தங்களின் தாய்மொழி வழியாக கல்வி கற்பது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஏனெனில், அவர்களுக்கான பள்ளிகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. அதனால், பெரும்பான்மை மொழி கல்வி நிலையங்களில் அவர்களின் தாய்மொழியை 3வது பாடமாக சேர்க்க வேண்டும். மேலும், மொழி சிறுபான்மை மக்களின் பிள்ளைகள் பெரும்பாலோர் தங்கள் மாநிலத்தின் பெரும்பான்மை மொழியில் தேர்ச்சிப் பெறும் வாய்ப்பையும் அவர்கள் இழக்கின்றனர். இதனால், வேலை வாய்ப்பு, உயர் கல்வி போன்றவற்றில் அவர்களால் போட்டியிட முடிவதில்லை. எனவே, பெரும்பான்மை மொழிப் பாடங்களையும் அவர்கள் கற்பதற்கு வசதியாக நிதியுதவி, குறைந்தப்பட்ச கல்வித் தகுதி போன்ற சலுகைகளை வழங்க வேண்டும்’ என்று பரிந்துரைத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment