
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆசியாவுக்கான தனது பயணத்தைத் துவங்கியுள்ளார். ஆசிய நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகளை வலுப்படுத்துவது தனது இப்பயணத்தின் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.
புதிய நூற்றாண்டின் சவால்களுக்கு முகம்கொடுக்கும் விதமாக இந்த உறவை இருநாடுகளும் புதுப்பிக்க வேண்டும் என்று ஒபாமா தெரிவித்துளார்.
ஜப்பானின் ஒகினாவா தீவில் அமெரிக்க இராணுவ தளம் அமைந்துள்ள பிரச்சினையை முன்வைத்து தான் தேர்தல் வெற்றி பெற்றதை ஜப்பானிய பிரதமர் யுகியோ ஹடயாமா நினைவுகூர்ந்ததுடன்,அந்த ராணுவ தளத்தை நீக்கவேண்டும் எனவும், உறவில் சிக்கல்கள் தோன்றாமல் இருக்க இந்த விவகாரம் வேகமாக தீர்க்கப்படுவது அவசியம் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment