Nov 12, 2009

அஸிம் ஆஜ்மிக்குக் கொலை மிரட்டல்

தன்னை மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தாக்கிய விவகாரத்தில் பால் தாக்கரே குறித்து விமர்சனம் செய்ததற்காக, சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அஸிம் ஆஜ்மிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றப் பதவி பிரமாணத்தின் மோது மராட்டி மொழியில் தான் அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவி பிரமாணம் எடுக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா விடுத்திருந்த எச்சரிக்கையை மீறிச் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அஸிம் ஆஜ்மி இந்தி மொழியில் பதவி பிரமாணம் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரைச் சட்டமன்ற வளாகத்திலேயே நவநிர்மான் கட்சி எம்.எல்.ஏக்கள் அடித்து உதைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பால்தாக்கரே அஸிம் ஆஜ்மியைத் தாக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அஸின் ஆஜ்மி, "பால் தாக்கரே சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்கிறார்" என்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அஸிம் ஆஜ்மிக்கு வெளிப்படையாகவே சிவசேனாவினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இன்று அவருடைய கைப்பேசியில் அவரை நேரடியாக அழைத்து கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. பால்தாக்கரேயை விமர்சித்த அஸின் ஆஜ்மியைக் கொலை செய்து விடுவோம் என அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் மராட்டி மொழியில் பேசிய சிலர் மீது ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ரயில்நிலைய காவலர்கள் தாக்குதல் தொடுத்தவர்களை விரட்டியதாகவும்

No comments: