Nov 13, 2009

அடுத்தத் தலைமுறை அணு உலையை ரஷ்யா அறிமுகப்படுத்தும்


2014ஆம் ஆண்டிற்குள் அடுத்தத் தலைமுறை அணு உலையையும், புதிய வகை அணு எரி பொருளையும் இரஷ்யா அறிமுகப்படுத்தும் என்று அந்நாட்டு அதிபர் திமித்ரி மெட்விடேவ் கூறியுள்ளார்.தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் அணு சக்தி பொறியியல் மேம்பாட்டைத் தனியாக மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டத்தின் கீழ் அடுத்த தலைமுறை அணு உலையும், புதிய வகை அணு எரிபொருளும் உருவாக்கப்படும். 2014ஆம் ஆண்டிற்குள் உருவாக்கப்படும் இவ்விரண்டு தொழில்நுட்பங்களுக்கு உள்நாட்டிலும் அயல் நாடுகளிலும் பெரிதும் வரவேற்பு இருக்கும் என்று கூறியுள்ளார்.

இரஷ்யாவின் அணு மின் உலை தயாரிப்பு நிறுவனமான டிவிஇஎல் உலகம் முழுவதிலும் இயங்கும் அணு உலைகளில் 17 விழுக்காடுகளை தயாரித்து வழங்கிய பெரும் நிறுவனமாகும். இந்நிறுவனம் டிவிஎஸ்-கிவாட்ரட் எனும் புதிய அணு எரிபொருளை உருவாக்கி வருகிறது.இவ்வகை அணு உலையை யூரல் பகுதியில் உள்ள பெலோயார்க்ஸஃ அணு உலைக் கூடத்தில் கடந்த இருபது வருடங்களாக சோதனை ரீதியாக இயங்கி வருகிறது. இந்த வகை அணு உலைகளையே இரஷ்யா அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கும் என்பதை மெட்விடேவ் தெரிவித்துள்ளார்.

No comments: