Oct 20, 2009

இந்தியாவை கொள்ளை அடிக்கும் அம்பானி வகைரா


உலகின் பெரும் பணக்காரர்களில் இருவரான இந்தியாவின் அம்பானி சகோதரர்களுக்கு இடையிலான சண்டை தற்போது இந்திய உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளது.சந்தை விலையை விட தனது நிறுவனத்துக்கு குறைந்த விலையில் எரிவாயுவை விற்பதற்கு இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தை தலைமைதாங்கி நடத்தி வரும் தனது சகோதரர் முகேஷ் அம்பானி முன்பு ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அவர் அந்த ஒப்பந்தப்படி தற்போது நடக்கவில்லை என்றும் முகேஷிடமிருந்து விலகியுள்ள அனில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் எரிவாயுவின் விலையை நிர்ணயிக்கும் உரிமை இந்திய அரசுக்கு மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மோதல் மூலம் இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் நிலவும் குறைபாடுகள் வெளியில் வந்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

No comments: