Oct 9, 2009

சந்திரன் மீது நாசா அனுப்பிய விண்கலம் மோதியது


நிலவில் தண்ணீர் உள்ளதா என்பதை கண்டறிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய விண்கலம், சந்திரன் மீது இன்று மோதியது.

சந்திரனின் ஒரு பகுதியில் கோடிக்கணக்கான டன் எடையுள்ள உறை பனி மறைந்து இருப்பதாகவும், அந்த இடத்தை மோதி தகர்த்தால், தண்ணீர் உள்ளதா என்பதை கண்டறியலாம் என்ற நாசா விஞ்ஞானிகள் கருதினர்.

இதனையடுத்து 2.2 டன் எடையுள்ள காலி விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி வைத்தனர்.அதனுடன் கலர் கேமராக்கள் இணைந்த `எல்.சி.ஆர்.ஓ.எஸ்.எஸ்' என்ற செயற்கைக்கோளையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நாசா அனுப்பிவைத்த அந்த விண்கலம் சந்திரனின் தென்துருவத்தின் மீது இந்திய நேரப்படி இன்று மாலை பலமாக மோதியது.

இதனைத் தொடர்ந்து நிலவில் தண்ணீர் உள்ளதா,இல்லையா என்பது இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் தெரிய வரும் என நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments: