Apr 4, 2016

கண்ணில் கட்டி, கண் வலி குறைய‌!

1).  சுடு தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் கலந்து கர்சீப் அல்லது பஞ்சை நனைத்து கையின் தோல் உள்ள பகுதியில், உள்ளங்கைக்கு பின் பகுதியில் வைத்துப் பார்க்க வேண்டும்.  கை பொறுக்கும் சூட்டில் இந்த ஒத்தடத்தை காலை, மாலை இரண்டு வேளையும் 5 நிமிடத்துக்கு கண்களுக்கும் தரலாம்.

2)..வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும். சோற்றுக் கற்றாழை தோலைச்சீவி அதன் சிறிது ஜெல்லை தண்ணிரில் கழுவி கண் இமைகளுக்கு மேலே வைத்து கட்டி 5 நிமிடம் கழித்து எடுக்க கண்ணில் கட்டி, கண் வலி குறையும்.

3). 10 மி.லி பன்னீரில்10 கிராம் மரமஞ்சள், 3 கிராம் மஞ்சள் மற்றும் 3 கிராம் படிகாரம் ஆகியவற்றை கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை எடுத்து ஒரு துணியில் வடிகட்டி அந்த நீரை கொண்டு 7 நாட்கள் முகம், கண்கள் ஆகியவற்றை நன்றாக கழுவி வந்தால் கண்ணில் ஏற்படும் கட்டிகள் குறைந்து கண் சிவப்பு, கண் வலி ஆகியவை குறையும்.

No comments: