தேச பக்தியை நரேந்திர மோடி அரசு கேலிக் கூத்தாக்கி வருவதாகவும், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை போன்ற விவகாரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜேஎன்யு விவகாரத்துக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதாகவும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம்சாட்டின.
சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்): என் வாழ்நாளில் இப்படியொரு தேச பக்தியை! நான் பார்த்ததே இல்லை. ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா தாக்கப்பட்டிருக்கிறார். விடியோ பதிவுகள் (பேச்சு) திரிக்கப்படுகின்றன. யதார்த்தமான விஷயங்களை விலைகொடுத்து தேச பக்தியை ஏன் நீங்கள் (அரசு) கேலிக் கூத்தாக மாற்றுகிறீர்கள்?
டெரக் ஓ பிரையன் (திரிணமூல் காங்கிரஸ்): வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புத்தன்மை, மத நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள்கூட குடியரசுத்தலைவர் உரையில் இடம்பெறவில்லை.
இளைஞர்களை (ஜேஎன்யு மாணவர்கள்) சிறையில் அடைப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர அரசு முன்வர வேண்டும்.
பிரபுல் படேல் (தேசியவாத காங்கிரஸ்): பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் என்றெல்லாம் அரசு பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஜேஎன்யு விவகாரத்தைதான் நாள்தோறும் பார்க்க நேரிடுகிறது.
அஹமது படேல் (காங்கிரஸ்): ராகுல் காந்தி, ஆனந்த் சர்மா, சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் ஜேஎன்யு மாணவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததில் என்ன தவறு இருக்கிறது?

No comments:
Post a Comment