நாம் தமிழர் கட்சி, இது தமிழ் மக்களின் இந்தியாவின் ஆதி குடி மக்களின் கட்சி. இந்தியா என்கிற நாடு இந்து என்கிற சொல் வெள்ளைகாரன் உருவாக்கியது. இதன் வரலாறு என்பது 200 வருடங்களை கூட தாண்டாதது.
தமிழர்கள் உலக நாகரிகத்தில் ஒரு மூத்த குடி. கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி. தமிழ் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகளை கடந்து விட்டது. ஹிந்தி, சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு என்று ஏனைய இந்திய மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து தோன்றியவைகள்தான். இந்த மொழிகளின் வரலாறு 500 வருடங்களை கூட தாண்டி இருக்காது.
தமிழ்நாட்டை வந்தேறி ஆரிய பிராமணர்களும், வடுக தெலுங்கர்களும் ஆண்டது போதும். தமிழ்நாட்டை கொள்ளையடித்து, தமிழர் வளங்களை அழித்தார்கள் இந்த கொடியவர்கள். இன்றைய தமிழர்களின் தேவை நம்தமிழர் கட்சி. தமிழ்நாடு வளம்பெற, விவசாயம் செழிக்க, கட்ச்சத்தீவு மீட்கப்பட, மீனவர்கள் பிரச்சனை தீர தமிழ் ஈழம் பிறக்க ஜாதி, மத வேறுபாடுகளை கலைந்து நாம் எல்லாம் தமிழர்கள் என்கிற ஒரு கோடையின் கீழ் ஒன்றுபடுவோம். நாம் தமிழர் என்று சொல்லி, நாம் தமிழர் கட்சிக்கு நமது வாக்குகளை செலுத்தி வெற்றிபெற செய்வது இன்றைய காலத்தின் அவசரம், அவசியம், அதுவே ஒரு சரியான மாற்று.
இந்திய வரலாற்றி முதன் முறையாக 234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த மிகப்பெரும் மாநாடு வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
* யாழினி*
ஆசிரியர்: சிந்திக்கவும்.நெட்
1 comment:
பணி சிறக்க வாழ்த்துக்கள்
Post a Comment