Nov 16, 2014

.மனிதன் மனதில் இவ்வளவு குப்பைகளா?

நவம்பர் 16/14: ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் பிறந்தது முதல் இன்று வரை நாற்றமெடுக்கும் குப்பைகள் பல படிந்து கிடக்கிறது, அதன் அளவும், வீரியமுமே ஒருவருக் கொருவர் வேறுபடுகிறது. 

மனதின் குப்பைகள்: பொய், புரட்டு, புறம்பேசுதல், ஆணவம், திருட்டு, கல்நெஞ்சம், தீண்டாமை, காழ்ப்புணர்ச்சி, மதவெறி, ஜாதிவெறி, இனவெறி, நிறவெறி, வறட்டு கொளரவம், விதண்டாவாதம், வம்பு சண்டை, ஒழுங்கீனம், அலட்சியம், விரக்தி, நேரம்தவறுதல், அறியாமை, தாழ்வுமனப்பான்மை, கோழைத்தனம், அவநம்பிக்கை, பொறுப்பின்மை, பொய்சாட்சி, பேராசை, சந்தர்ப்பவாதம், முகஸ்துதி, காக்கா பிடித்தல், நம்பிக்கைத்துரோகம், அடக்கு முறை, வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதம், சர்வாதிகாரம், சித்திரவதை, 

ஆணாதிக்கம், வரதட்சணைகொடுமை,, லஞ்சம், ஊழல், சுரண்டல், அபகரித்தல், கடத்தல், கலப்படம், வட்டி வாங்குதல், உழைப்பைத் திருடுதல், பதுக்குதல், வீண்விரயம், நஷ்டப்படுத்துதல், வாக்குதவறுதல், நன்றிமறத்தல், மாசுபடுத்துதல், இயற்கை வளம் அழித்தல், மூடநம்பிக்கை, குழப்பம்விளைவித்தல், பழிசுமத்துதல், அவமானப்படுத்துதல், வக்கிரம், ஆபாசம், சில்மிஷம், ஈவ்டீசிங், பிறர்மனை நோக்குதல், வேசித்தனம், விபச்சாரம், ஓரினச்சேர்வு, கள்ளத்தொடர்பு, கருக்கலைப்பு, சூதாட்டம், புகைபிடித்தல், மது, போதை, வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு. இதுபோன்று நிறைய குப்பைகள் கொட்டி கிடக்கின்றது.

1). இந்தக் கொடிய குப்பைகளை நம் மனதில் அடையாளம் காண்பது முதல் படி (identification). 

2). அதை நீக்க வேண்டும் என்று ஆவல் கொள்வது இரண்டாம் படி (desire).

3).  அதற்கான முயற்சிகளை எடுப்பது மூன்றாம் படி (mind purification).

4).  நல்லெண்ணங்களை நிரப்பி, தீய எண்ணங்களை விரட்டுவதில் வெற்றியடைவது நான்காம் படி (self-realization). 

இதை செய்யாதவரை  நமக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்காது.

*யாழினி*

No comments: