Jun 22, 2014

விஜய்யின் மகத்தான மக்கள் சேவை!!

மகத்தான மக்கள் சேவையா ஆற்றுகிறது?

“சேவை வரியிலிருந்து விலக்கு அளித்துத்  திரைப்படத் தொழிலைக் காப்பாற்றுங்கள்” என்று நடிகர் விஜய் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

திரைப்படத் துறையை ஏன் காப்பாற்ற வேண்டும்?

அது என்ன மகத்தான மக்கள் சேவையா  ஆற்றிக் கொண்டிருக்கிறது?

அல்லது பண்பாடுகளையும் நாகரிகத்தையும் காப்பாற்றப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறதா?

சினிமாவிலும் குடும்ப மாண்புகள் பேணப்பட்ட ஒரு காலம் இருந்தது.

அதெல்லாம் இப்போது அடியோடு மாறிவிட்டன.

இன்றைய திரைப்படங்கள் பற்றி நாம் அனைவரும் அறிவோம்

வக்கிரமான கண்றாவிக் காதல், ஆபாசம், வன்செயல், ரவுடித்தனம், சட்டத்தைக் கையில் எடுத்தல், இரத்தச் சிதறல், இளைய தலைமுறையைச் சீரழித்தல்,நடனம் எனும் பெயரில் முன்புறத்தையும் பின்புறத்தையும் சகிக்கமுடியாத அளவுக்கு ஆட்டி, ஆட்டிக் காண்பித்தல்..

இதற்குப்போய் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமாம்.. கொடுமை!?

இந்திய அரசு இப்போது செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்..

அடுத்த பத்தாண்டுகளுக்கு திரைப்படத் தயாரிப்புக்கே தடை விதிக்கவேண்டும்;  அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து  நல்ல, பயனுள்ள படங்கள் மட்டுமே  தயாரிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

1 comment:

drogba said...

If you watch this u will support vijay. (I don't like him either)

http://youtu.be/mgERbAXQPw0