Sep 24, 2013

நரேந்திர மோடிக்கு ரஜினிகாந்த் ஆதரவா?

வரும் 26 வியாழக்கிழமை திருச்சிக்கு நரேந்திரமோடி வருகை தருகிறார். இதனையொட்டி ஒவ்வொரு ஊரிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வரும் பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தர வேண்டும் என்றும், அவரது ரசிகர்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். 

ஆனால், ரஜினி மவுனமாகவே இருந்து வந்தார். இந்தநிலையில் திருச்சியில்  ரஜினி தளம் மற்றும் ரஜினிகாந்த் தலைமையகம் என்ற பெயரில் ரஜினிகாந்திற்கு மோடிக்கு பூங்கொத்து கொடுப்பது போலவும், அதில் 'உங்களத்தான் நம்புது இந்த பூமி, இனி இந்தியாவுக்கு நல்ல வழிகாமி', 'மக்களின் எதிர்பார்ப்பே ஒளிரட்டும் பாரதம்', 'பாரத தாயை மீட்க, தர்மம் காக்க வந்தவரே' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர்களால் பாஜகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மற்ற கட்சியினரோ வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

சிந்திக்கவும்: பெரியார் பிறந்த மண்ணில் காவிப்படைகளுக்கு கல்லறை கட்டுவோம். மோடியின் வருகைக்கு மௌனம் சாதித்து வரும் பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளையும், ஓட்டுக்கட்சிகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்.

2 comments:

Anonymous said...

மோடிக்கு ரஜினி பூங்கொத்து அளிப்பது போன்ற படத்துடன் பாஜக பித்தலாட்டம் : ரசிகர்கள் குற்றச்சாட்டு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தனது பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி அதற்காக சகல வழிகளிலும் ஆதரவைத் திரட்டி வருகிறது.

மோடிக்கு ஆதரவு திர‌ட்ட மோடியும் பா.ஜ.க வும் செய்து வரும் நூற்றுக்கணக்கணக்கான பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று.

Anonymous said...

modi illai kedi