ஏப்ரல் 19: இந்தியர்களை ஆட்டி படைக்கும் தங்கநகை மோகத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.
முகத்தில் புன்னகை இருந்தாலும், கழுத்தில் தங்கநகை இருந்தால் தான்
சமுதாயத்தில் மதிப்பு இதுதான் இந்தியாவின் நிலை.
கழுத்து நகையை வைத்தே, ஒருவரது வசதியின் அளவுகோல்
நிர்ணயிக்கப்படுகிறது. விலை குறைந்தாலும், உயந்தாலும்
தங்கத்தின் பேரில் மக்களுக்கு அலாதியான மோகம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்தியாவில் சராசரி ஒருவரிடம் குறைந்தது ஒரு குண்டு மணியாவது தங்கம் இருக்கும்
என்றே நம்பலாம். எந்த பிரோஜனமும் இல்லாமல் பணம் தங்கமாக முடங்கி கிடக்கிறது.
இதற்குக்காரணம் தொன்று தொட்டு தங்கத்தில் பேரில் இருக்கும் ஒரு மோகம். அதிக மதிப்புள்ள, எளிதில் பணமாக்கக் கூடிய ஒரு பொருளாக தங்கம் இருப்பதால் இதை இந்தியர்கள் பெரிதும் விரும்புகின்றனர் போலும்.
தங்க மோகம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்று பாருங்கள். மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த தட்டா பஹே (32). சரத்பவார் கட்சியை சேர்ந்த இவர்
ரூ. 1.25 கோடி மதிப்பிலான முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட சட்டை மற்றும் பத்து விரல்களிலும் தங்க மோதிரம், கழுத்து நிறைய தங்க செயின்கள், பிரெஸ்லெட்கள் ஆகியவற்றை அணிந்து கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
இவர் அணிந்து வந்த சட்டையின் எடை 3.5 கிலோ. அதன் மதிப்பு ரூ.1.25 கோடி எனவும், கழுத்தில் அணிந்துள்ள தங்க நகைகள், உள்ளிட்டவை மொத்தமாக ரூ.7 கோடி. இதற்க்கு இவர் சொன்ன காரணாம் மிக விசித்திரமானது. நாடு முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து பிரபலமாகவே இப்படியொரு வித்தியாசமான காஸ்டியூமில் வந்தேன். மேலும் வரப்போகும் 2014-ம் லோக்சபா தேர்தலில் சீட் வாங்கி போட்டியிட வேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.
அடுத்து இது போன்ற கிறுக்கர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய கார்பரேட் கொள்ளையர்களின் நிறுவனமான டாடா
தங்கத்தால் ஆன கார் ஒன்றினை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. நனோ காரின்
வடிவமைப்பை இந்த கார் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடும் வறட்சி, வறுமை, பட்டினி, விவசாயிகள் தற்கொலை அதிகரித்து என்று தினமும் ஏழை தினமும் செத்து மடிகின்றனர். பெண்களை தங்கத்தை வரதட்சணையாக கொடுக்க முடியாமல் திருமணத்திற்கு ஏங்கி நிற்கின்றனர்.
இந்திய பெண்கள் முதலில் தங்கம் என்கிற அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டும். இவர்கள் தங்கத்தின் மீது கொண்ட மோகத்தையே இவர்களுக்கு வரதட்சணை விலங்காக மாட்டுகிறார்கள் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்கம் அணியவதில்லை என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டாலே இந்த தங்க மோகம் குறைந்து போகும் என்று நம்பலாம்.
3 comments:
ஆபரணங்கள் அவசியமில்லை தான்.... தங்க நாணயங்களை சேமிப்பது ஒரு நல்ல முதலீடு தானே...
காலங்காலமாய் தொடரும் ஆசை.இதில் சேமிப்பு என்ற நன்மையையும் உண்டு
பேராசை - அவரவர் உணர வேண்டியது...
பலரின் வாழ்வை சீர்படுத்துவதும் இதே தங்கம் தான்...
Post a Comment