Feb 18, 2013

தொடர்ந்து ஒடுக்கப்படுவதால் வீதிக்கு வந்து போராடும் மக்கள்!

பிப் 19/2013: பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பின் சார்பாக ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமைகளை மீட்க்கும் போராட்டம் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிப் 17 ம் தேதி யூனிட் மார்ச், மற்றும் பொது கூட்டம் தாம்பரம், திருச்சி, நாகர்கோவில் ஆகிய மூன்று நகரங்களிலும், முறைப்படி போலீஸ் அனுமதியை பெற்று நடத்த இருந்தார்கள்.

இந்நிலையில், பேரணி மற்றும் பொது கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் கொடுத்த அனுமதி மறுத்து காவல்துறை தனது பாசிச முகத்தை காட்டி உள்ளது. பின்னர் தடைகளை கடந்து அவர்கள் அந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு தங்கள் உரிமைகளை ஜனநாயக வழிகளில் கேட்க்க கூட உரிமை இல்லையா? ஏன் இந்த பாராபட்சம். அவர்கள் இந்த நாட்டிற்கு என்ன துரோகம் செய்தார்கள்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் தங்களது விகிதாசாரத்துக்கு மேல் போராடி பல்வேறு வகைகளிலும் தியாகங்களை செய்தவர்கள். கேரளா மாப்பிள்ளைமார்கள், கான்சாகிப் மருத நாயகம், திப்பு சுல்த்தான் என பலர்  வெள்ளையர்களை எதிர்த்து இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்கள்.

ஒருபுறம் காந்திஜி உடனும் மறுபுறம் சுபாஸ் சந்திர போஸ் உடனும் இணைந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய சமூகம். அந்நிய காலனி ஆதிக்க வெள்ளையர்கள் மீது கொண்ட வெறுப்பினால் ஆங்கிலத்தை கற்பது மத அடிப்படையில் தவறு என்று சொல்லி ஒதுக்கியவர்கள்.

அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை ஒடுக்குக்கப்பட்ட ஒரு சமூகமாக மாற்றி இருப்பது வேதனைக்குரியதே. தங்களது கோரிக்கைகளை ஜனநாயக அடிப்படையில் கேட்க கூட அவர்களுக்கு உரிமை இல்லையா? இந்தியாவில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? இல்லை சர்வாதிகார ஆட்சியா? இந்தியா போன்ற பல்வேறு சமூக மக்கள் வாழும் ஒரு நாட்டில் எல்லோருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இது போன்ற அடக்குமுறைகள், பல்வேறு இன மற்றும் மொழி மக்களுக்கும், சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கும் தொடர்ந்து நடந்தால் அதுவே இந்தியாவிற்கு மிகபெரிய ஆபத்தாக முடியும். இந்த நிலை தொடரும் என்றால் ரஷ்ய குடியரசுகளுக்கு ஏற்ப்பட்ட நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்ப்படும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

No comments: