Feb 17, 2013

லஞ்சம் வாங்குவதில் தங்க பதக்கம் நிச்சயம்!

பிப் 18/2013: இந்திய அரசுக்கு  ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்திற்காக சுமார் ரூ 360 கோடி லஞ்சம் கைமாறியிருக்கிறது என்கிற தகவல் இந்தியாவின் லஞ்ச லாவண்யத்தை உலகம் முழுவதும் பறை சாற்றி இருக்குக்கிறது. 
பிரதமரும் ஜனாதிபதியும் மிக முக்கியமான நபர்களும் போவதற்கு 8 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான  2002ம் ஆண்டு டெண்டர் வெளியிடப்பட்டது. 2008ம் ஆண்டு அமெரிக்க ஹெலிகாப்டரும், இத்தாலிய ஹெலிகாப்டரும் என்கிற போட்டியில் இத்தாலிய  ஹெலிகாப்டறை வாங்க ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது . 
அதன்படி 2010ம் ஆண்டு இத்தாலிய நிறுவனத்திடம் இருத்து  ரூ 3,600 கோடி செலவில் 12 AW-101 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான அனுமதியை பாதுகாப்புத் துறை கொடுத்தது. இந்த ஒப்பந்தத்தை தமக்கு சாதகமாக முடித்துக் கொள்வதற்காக ஒப்பந்தத் தொகையில் சுமார் 10 சதவீதம் (ரூ 370 கோடி) லஞ்சம் கொடுக்கப்பட்டதாக இத்தாலிய புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 
2004 முதல் 2007 வரை இந்திய விமானப்படை தலைமை தளபதியாக இருந்த  எஸ்.பி. தியாகிதான்  இந்த டெண்டரை இத்தாலிய நிறுவனத்துக்கு கொடுத்தார். ‘தியாகியின் உறவினர்களான ஜூலி தியாகி, தோக்சா தியாகி, சந்தீப் தியாகி என்பவர்கள் மூலமாக அவருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று  இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிந்திக்கவும்; இந்தியாவில் எந்த காரியத்தையும் பணம் இருந்தால் நிறைவேற்றி கொள்ளலாம். பணம் பாதாளம் வரைக்கும் என்கிற பல மொழி இந்தியாவுக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்தும். சாதாரண தாலுகா ஆபிஸ் முதல் பிரதமர் மற்றும் மற்றும் பாதுகாப்புத்துறை வரை எல்லா இடங்களிலும் லஞ்சம்.
இலஞ்சத்தை ஒழிக்க இலஞ்ச ஒழிப்பு துறை என்று ஒன்று உள்ளது அந்த துறையிலும் லஞ்சம். நாட்டை பாதுகாக்க வாங்கப்பட்ட பீரங்கிகள் விசயத்தில் லஞ்சம், நாட்டை பாதுகாக்க உயிர் துறந்த ராணுவ வீரர்களை அடக்கம் செய்ய சவபெட்டி வாங்கியதிலும் ஊழல். மொத்தத்தில் இந்தியாவில் பணத்தை கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதே உண்மை. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடிய வில்லையே என்று கவலை வேண்டாம், லஞ்சம் வாங்குவது பற்றி போட்டி வைத்தால் நமக்கு தங்ககப்பதக்கம் நிச்சயம்.

4 comments:

Easy (EZ) Editorial Calendar said...

எனக்கு ஒரு காலத்தில் நம் நாடு இந்தியா என்று சொன்னாலே மனதிற்குள் ஒரு விதமான பெருமை இருக்கும்.......இப்போ அதெல்லாம் போய் என் நாடு இந்தியா என்று சொல்லவே மிக மிக கஷ்டமாக உள்ளது......


நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ruban said...

இதற்கு எனத்தான் முடிவு என்று தெரிய வில்லை.. நாட்டின் சட்டத்தை மாத்தினாலும் ஓட்டையை பயன் படுத்து கிறார்கள் ... காங்கிரஸ் கு இணை ப.ம.க ஒரு மூன்றாவது அணி வந்தால் கொஞ்சம் மாற்றங்கள் வர வைப்புகள் உள்ளன... முதலில் மக்கள் உணர வேண்டும்.. இல்லாவிட்டால் ஒனும் செய்ய முடியாது... இதற்கு மக்களை ஜாதி மதம் போன்ட பிரிவு பிரிவு வாக மக்களை யௌசிக முடியாமல் வைத்து இறுப்பது, முதலில் மக்கள் இதில் இறுதி வேலயே வர வேண்டும்... இலவசத்தை ஒழிக்க வேண்டும் முதலில்...

Anonymous said...

bjp பன்னாடைகளை விட நாட்டையாளும் காங்கிரஸ் கபோதிகளை மக்கள் மன்னிக்ககூடாது

Anonymous said...

தீவிரவாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் பொது மக்களை கொல்லாமல் ,,தப்பாக தீர்ப்பளிக்கும் நிதிபதிகள்,லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் , அரசியல்வாதிகள், காங்கிரஸ்காரர்கள் ,இவர்களை கொல்லுங்கள்