Dec 3, 2012

கூடங்குளம் வருங்காலத்தின் போபால்!


போபால் அன்று:  போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தில் 1984 ஆம் ஆண்டு விஷவாயு கசிவு ஏற்ப்பட்டது. இதில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த விபத்து நிகழ்ந்து இன்றோடு 28 ஆண்டுகள்
பூர்த்தியாகிவிட்டன. விபத்துக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சேர்மன் (அமெரிக்காவை சார்ந்த) வாரன் ஆண்டர்சனை இந்தியா தேசிய கீதம் முழங்க ராஜ மரியாதையோடு வழியனுப்பி  வைத்தது.
 
பின்னர் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணத்திற்கு காரணமான போபால் விஷவாயு வழக்கில் நீதிமன்றம் ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. உடனே (இந்தியாவின் துப்பறியும் புலி) சி.பி.ஐ. ஆண்டர்சனை ஒப்படைக்க அமெரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்துவதற்கு அனுமதியளிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. நல்ல விதமாக ஆண்டர்சனை வழியனுப்பி வைத்து விட்டு பின்னர் இந்த நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்காமல் ஏமாற்ற இது போன்ற கீழ்த்தரமான யுக்திகள் கையாளப்பட்டது.

போபால் இன்று: போபாலின் இன்றைய நிலை விபத்து நிகழ்ந்த யூனியன் கார்படை தொழிற்சாலையின் சுற்றுப்புறத்தில் 350 மெட்ரிக் டன் நச்சுக்கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த நச்சுக் கழிவுகளை அகற்ற கடந்த 28 ஆண்டுகளில் அரசு எந்த தீர்வையும் எடுக்கவில்லை.

இது போதாதென்று அங்குள்ள நீர் நிலைகளில் நச்சுகலந்துள்ளது. இதில் பெரும் சோகம் என்னவென்றால் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முறையான நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. பல்லாயிரக் கணக்கான மக்கள் நிவாரணம் வேண்டி வீதிகளில் போராடி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அரசு கூடங்குளம் அணு உலையை திறந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறது.
 
போபால் விசவாய்வு கசிவினால் ஏற்ப்பட்ட 350 டன் நச்சு கழிவுகளை கொட்ட இந்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திடமும் பிட்ச்சை கேட்கிறது. முதலில் குஜராத்தில் இந்த நச்சு கழிவுகளை தேக்கிவைக்க திட்ட மிட்டது, அதற்க்கு குஜராத் அரசும் சம்மத்தித்தது, ஆனால் அம்மாநில மக்களின் போராட்டத்தால் குஜராத் அரசு இடம்தர மறுத்து விட்டது. நாக்பூரில் அனுமதி கேட்கப்பட்டது அங்கும் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்நிலையில் நச்சுக்கழிவு பிரச்சனை காலவரையற்று இழுத்தடிக்கப்படுகிறது.

விஷ வாயுவை கட்டுப்படுத்த உரிய பாதுகாப்பு இல்லாமல் அந்த தொழிற்சாலை இயங்கிய குற்றத்திற்காக யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சேர்மன் (அமெரிக்காவை சார்ந்த) வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். மேலும் பாதுகாப்பு இல்லாமல் அந்த தொழிற்சாலையை நடத்த அனுமதித்த அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற தொழிற்சாலை பயங்கரவாதத்திற்கு தீர்வு .ஏற்ப்படும்.

சிந்திக்கவும்: கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை கோலார் தங்க சுரங்கத்தில் மூடப்பட்ட ஒரு சுரங்கத்தில் கொட்ட இந்திய அரசு திட்டமிட்டிருந்தது. பின்னர் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் அப்படிப்பட்ட எண்ணம் இல்லை என்று பல்டி அடித்தது. கூடங்குளம் வருங்காலத்தின் போபால் என்பதை மக்கள் நினைவில் கொள்வது நல்லது.

1 comment:

Seeni said...

bethanai.... z

vethanai.........

kodumai.....