Dec 2, 2012

வெளிநாட்டில் வாழும் இந்திய பெற்றோர்களே ஜாக்கிரதை!


Dec 03: ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்திரசேகர் தனது மனைவி மற்றும் 7 வயதான மகன் ஸ்ரீராமுடன் நார்வேயில் வசித்து வந்தார். அவரது மகனை அங்கே உள்ள ஒரு பள்ளி கூடத்தில் சேர்த்திருந்தனர்.
 
ஐரோப்பிய நாடுகளில் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளிடம் அவர்கள் வீட்டில் எப்படி நடத்தப்படுகிறார் என்பதை பற்றி விசாரிப்பார்கள். நாம் இந்தியா மாதிரி வீட்டில் பிள்ளையை அடித்தாலோ அல்லது திட்டினாலோ அது அங்கே பெரும் குற்றமாக கருதப்படும். அவர்கள் மீது முறைப்படி சட்ட நடவடிக்கைகள் எடுப்பார்கள்.
 
அந்த அடிப்படையில் சந்திர சேகர் மகனிடமும் ஆசிரியர்கள் விசாரித்திருக்கிறார்கள் அப்போது அவரது மகன் தன்னை வீட்டில் தாயாரும், தந்தையாரும் அடிக்கடி திட்டுவார்கள் என்று கூறியிருக்கிறான். இதனால் குழந்தையை மிரட்டிய குற்றத்தின் அடிப்படையில் அந்த தம்பதியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இருந்து தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைதண்டனை விதிக்குமாறு நீதி மன்றத்தில் கோரப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த வழக்கில் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சந்திரசேகரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் இந்தியா தலையிடாது என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: நாம் இந்தியாவில்தான் சட்டங்களை மதிப்பதில்லை, வெளிநாட்டிலாவது போயி ஒழுங்காக அந்த நாட்டு சட்டங்களை மதித்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். இந்தியாவில் குழந்தைகளை நாம் என்னவெல்லாம் நினைகிறோமோ அதையெல்லாம் செய்யச்சொல்லி வற்புறுத்துவது குழந்தைகள் அடிபணியாவிட்டால் மிரட்டுவது, அடிப்பது இதுமாதிரி ஐரோப்பாவில் செய்தால் சிறைத்தண்டனை நிச்சயம். வெளிநாட்டில் வாழும் இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

3 comments:

Seeni said...

athu sari...

Anonymous said...

this is the only reason my sister and brotherin law came from US.

Sri Lanka Tamil News said...

மிகவும் புதிய தகவல்.
மிக்க நன்றி