செப் 26/2014: சமீபத்தில் சீன குடியரசு தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இலங்கை வரலாற்றில் இதுவரை செய்யப்படாத ஒரு அபிவிருத்தி திட்டத்தை சீன அரசு செய்ய இருக்கிறது.
கடலை நிரப்பி துபாய் ஸ்டைலில் ஒரு நகரை உருவாக்கும் திட்டத்தை சைனா ஹாபர் என்ஜினியரிங் கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளது. இலங்கை அரசு மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, அதன் அரசியல் தீர்வுகள் என அனைத்தையும் சீனத் தலைவர் பாராட்டியுள்ளார். சீன இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்தும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.
ராஜபக்சேவின் ராஜதந்திரம்: இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின் போது சர்வதேச நெருக்கடிகளை சமாளித்த நிலையிலேயே புலிகளை ஒழித்துக்காட்டியிருந்தார். ஆனால் சனல் 4- வெளியிட்ட போர்குற்ற ஆதாரங்களினால் இவரது பயங்கரவாதம் ஒவ்வொன்றாய் வெளிவர தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் அளவிற்கு இலங்கை அரசு சர்வதேச அளவில் வலிமை பெற்றிருக்க வில்லை.
அதேநேரம் ஐ.நா.வி்ன் விசாரணையின் பின்னால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் நிற்பதை அறிந்த ராஜபக்சே சீனாவின் உதவியை நாடினார். மேலும் இலங்கையில் ராஜபக்சேவுக்கு எதிரான ஒரு இராணுவ புரட்சி உருவாகலாம் சூழ்நிலையில் அதனை சமாளிக்க சீனாவுடனான பரஸ்பர பாதுகாப்பு உடன்பாடுகளை செய்து கொண்டார். இலங்கை அதிபரை ஒரு ராணுவ ஆட்சியின் மூலம் கூட கவிழ்த்து விட முடியாது என்பதை அமெரிக்க மற்றும் பிரிட்டனுக்கு உணர்த்தினார். இலங்கையில் ஒரு ராணுவ புரட்ச்சி மூலம் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர நினைத்தால் சீன இராணுவம் ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு அவரின் ஆட்சியை மீட்டு கொடுக்கும் என்பதே உண்மை. சீனாவை திறமையாக உள் இழுத்து போர்குற்ற விசாரணை, ராணுவ புரட்சி என்கிற மிரட்டல்களை இலகுவாக எதிர்கொண்டார்.
சீனா எதிர் நோக்கும் ஆதாயம்: ஆனால் ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போவாரா என்கிற நம்ம ஊரு பழமொழிக்கு ஏற்ப சீனா எதையும் ஆதாயம் இல்லாம் செய்யாது. நெருங்கி வரும் அமெரிக்க இந்திய உறவு, மாலை தீவுகளில் அமெரிக்கா அமைக்கும் சப்மெரீன் பேஸ், டியாகோகார்சியாவில் உள்ள அமெரிக்க இராட்சஸ தாக்குதல் தளம் போன்ற பல இராணுவ சமன்பாடுகளிற்கு விடையாக இலங்கையில் பிரமாண்டமான முப்படைத்தளத்தை அது அமைக்க எண்ணி இருக்கிறது. மதம் என்ற அடிப்படையில் பார்த்தால் கூட கன்பூஷியஸ் சீனாவும், பௌத்த இலங்கையும் பெரிய வேறுபாடுகளை கொண்டிருக்கவில்லை. சீனா உற்பத்திகள் இலங்கை சந்தையை பெரிதும் ஆக்கிரமித்துள்ளன. இலங்கை மீதான சீன ஆதிக்கம் என்பது எதிர்காலத்தில் இலங்கையை சீனாவின் ஒரு காலனி என்றே கொள்ளலாம்.
*யாழினி*
No comments:
Post a Comment