Nov 3, 2012

WE LOVE TAMIL EELAM!


Nov 04: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தமிழீழமே ஒரே தீர்வு என்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்
 
ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நடக்கும் விசாரணை கூட்டத்தில் பங்குபெற பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் அருள், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தமிழீழமே ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தினார்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்க, சென்னையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ‘டெசோ’ மாநாட்டின் தீர்மானங்களை நியூயார்க்கில் ஐநா மன்ற செயலாளரிடம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு ஆகியோர் கையளித்தனர்.

இலங்கைப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இலங்கையில் நடப்பதை அந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையாகப் பார்க்கக்கூடாது தமிழ் இனத்தை அழிக்க செய்யப்படும் இன அழிப்பாகவே பார்க்கவேண்டும். இலங்கை இனப் பிரச்னைக்கு தமிழீழமே ஒரே தீர்வு. உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற கருத்துக்களை மேல்கண்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
 
அமெரிக்காவின் கவலை: அமெரிக்கா சார்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, இலங்கையில் தற்போது தலைமை நீதிபதியை நீக்குவதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டிருப்பது நீதித் துறையில் அரசின் தலையீடாகும். இலங்கையில் மீள் குடியேற்றம் மற்றும் புனரமைப்புப் பணிகள் பெரும் கவலை ஏற்படுத்துகிறது. இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தமிழர் பகுதிகளில் ராணுவத்தைக் குறைத்தல், தேசிய இனப் பிரச்சினைக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல், அங்கீகரிக்கப்படாத ராணுவக் குழுக்களின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யவும் அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.
இந்தியாவின் நீலிக்கண்ணீர்: இந்தியத் தரப்பில், இலங்கை வடக்கு மாகாணத்தில் விரைந்து தேர்தல் நடத்தவேண்டும். போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்பத் தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இறுதிப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றியும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் தனியார் நிலத்தை ராணுவம் திரும்ப ஒப்படைக்கவும், ராணுவ உயர் பாதுகாப்பு வளையங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும்,. தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. போரை முன்னின்று நடத்திய இந்தியா இப்போது பேருக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறது.

இதே ரீதியில் உலக நாடுகள் அனைத்தும், இலங்கை குறித்து தங்களது வாதங்களை முன் வைத்துள்ளது. இது ஈழப்பிரச்சனையில் நம்பிக்கை அளிக்கும் விடயமாகும்.
 
ரௌத்திரம் பழகு
...யாழினி... 

No comments: