மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்! என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாடு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், மக்கள் விரோத கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
நாட்டின் அனைத்து மக்களும் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்கவும், சமூகத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களை சக்திப்படுத்திடவும், இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 21ந்தேதி கோவையிலும், மாநாடு நடத்தப்பட்டது. மேலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இம்மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.
சிந்திக்கவும்: ஒரு நாட்டின் நாட்டின் குடிமக்கள் யாவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அதுவும் இந்தியாவை போன்ற பல மதங்களையும் கலாசாரங்களையும் சேர்ந்த மக்கள் வாழும் நாட்டின் அரசு இயந்திரம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். எந்த குற்ற செயல்கள் நடந்தாலும் சிறுபான்மை மக்கள் கைது செய்யப்படுவது என்கிற நிலை மாறவேண்டும்.

2 comments:
We r accept that
nalla pakirvu!
Post a Comment