
தலித் சமூகத்தை சார்ந்த ஒரு இளைஞ்சர் வன்னிய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இதுதான் இந்த காடுவெட்டி குருவின் வெறி ஊட்டும் பேச்சிக்கு காரணம்.
இப்படிபட்ட கேவலாமான புத்தி படைத்தவர்கள்தான் இன்று மத மற்றும் ஜாதி கட்சிகளின் தலைவர்கள். ஒரு காதல், கலப்பு திருமணத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் அளவில் பொறுப்பில்லாமல் இவர் பேசியதால் பெரும் கலவரம் நடந்துள்ளது.
இவரை பின்பற்றி இவரது வன்னிய சங்கத்தினர் படுத்திய அவமானத்தில் பெண்ணின் தந்தையார் விஷம் குடித்து இறந்துள்ளார். அவரை அடக்கம் செய்ய கிளம்பிய சுமார் 2000 பேர் கொண்ட கும்பல் தலித் மக்கள் வசிக்கும் பகுதி வழியாக சென்று அவர்களின் 150 வீடுகள் மற்றும் வாகனங்களை தீக்கிரையாக்கி சுமார் 6 கோடி ருபாய் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
இதற்க்கு நமது ராமதாஸ் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று பார்ப்போம்.
இந்த கலவரம் குறித்து ஜெயா அம்மையார் மவுனம் காக்கிறார். கருணாநிதி வழக்கம் போல் தலித் மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அரசியல் நடத்துகிறார்.
சிந்திக்கவும்: காதல் திருமணம் இது இந்த காலத்தில் ஒரு சாதாரணமான விஷயம். இதற்க்கு ஒரு போர் போல ஒத்திகை பார்த்து கலவரம் செய்வது முறையான விடயமில்லை. இது வடிகட்டிய காட்டுமிராண்டிதனம். காடு வெட்டி, மரம் வெட்டி கடைசியில் மனிதர்களை வெட்ட உத்தரவு வழங்க ஆரம்பித்து விட்டார்கள் இந்த ரவுடி தலைவர்கள். தமிழர்களே உசாராக இருங்கள் இதுபோன்ற ஜாதிய, மத துவேசங்களுக்கு விலை போகவேண்டாம்.
3 comments:
ungal pakirvin moolame ithai
arinthen.......
kodumaiyaana vidayam....
மிகவும் வருத்தமான விஷயம்.......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
மனிதர்கள் முதலில் சிந்திக்கவேண்டும். நாம் யார்? எங்கிருந்து வந்தோம்,? எங்கு செல்ல இருக்கிறோம்?. நம்மை படைத்த இறைவனை நாம் சரியாக அடையாளம் தெரிந்துக்கொண்டால். அதுதான் நமது வாழ்வின் வெற்றி. இஸ்லாம் மனிதர்களை ஒரு ஆண் ஒரு பெண்ணில் இருந்து இறைவன் படைத்தாக சொல்கிறது. மனிதர்களில் சிறந்தவர் யார் அதிகம் இறைவனை அஞ்சுகிறார்களோ அவர்களே மனிதர்களில் சிறந்தவர். ஜாதியின் அடிப்படையில் பிரித்துப்பார்ப்பது அறிவீனம்
Post a Comment