வல்லரசான இந்தியா சிறையில் வாடுவது தமிழன்தானே என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. இதுவரை ஆயிரக்கணக்கில் தமிழ் மீனவர்களை சுட்டு கொன்றது சிங்கள பயங்கரவாத கடல்படை அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது கேவலமான இந்திய கடல்படை.
இந்நிலையில் இன்று இலங்கை அரசின் சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய தளபதி ரணவான தலைமையில் வெளிக்கடை சிறையில் சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது அதிரடிப்படை போலீசார் அநாகரிகமாக நடந்து கொண்டதால் தமிழ்க்கைதிகள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் மோதல் ஏற்ப்பட்டு கலவரமாக வெடித்தது.
இந்த கலவரத்தில் 12 தமிழ்க்கைதிகள் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 40 பேர் காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறையில் நடந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்டோர் இறந்திருக்ககூடும் என்று அச்சம் நிலவுகிறது.

தமிமுன் அன்சாரி: மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் ’இலங்கை கொழும்பு வெளிக்கடை சிறையில் இன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் பலர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்பு 1983ல் இதே வெளிக்கடை சிறையில்தான் தமிழ் விடுதலைப் போராளிகளான தங்கமணி, ஜெகன் குட்டிமணி உட்பட 27 தமிழர்கள் சிங்களப் பேரினவாத தூண்டுதலில் படுகொலை செய்யப்பட்டனர். அதுவே இலங்கையில் தமிழர்கள் ஆயுதமேந்தி போராடும் நிலையை ஏற்படுத்தியது.
தற்போது அதே வெளிக்கடை சிறையில் கலவரம் வெடித்திருக்கிறது. அங்கு விசாரணைக் கைதிகளாக ஏராளமான தமிழ் கைதிகள் உள்ளனர். அதில் இந்தியர்கள் உள்ளிட்ட பன்னாட்டு கைதிகளும் உள்ளனர். அவர்களின் நிலை என்னவாயிற்று என்று தெரியவில்லை என்று கூறி இருந்தார்.

1 comment:
தகவலுக்கு நன்றி.
Post a Comment