சமையல் காஸ் விலையை மத்திய அரசு இன்று உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை காட்டிலும் இது எல்லா தரப்பு மக்களையும், மிகப்பெரிய அளவில் நேரடியாக பாதிக்கும்.
ஏற்கனவே, சமையல் காஸ் வீடுகளுக்கு, மானிய விலையில் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும், என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மக்களின் அன்றாட தேவையான சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ. 11. 42 உயர்த்தப்பட்டுள்ளது.
இனிமேல் ஒவ்வொரு ஆறு மாதகாலத்திற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும், மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். அதற்கு மேல், தேவைப்படுவோர் சிலிண்டர் ஒன்றுக்கு, 750 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரம் வர்த்தக பயன்பாட்டிற்கான, 19 கிலோ எடை கொண்ட, காஸ் சிலிண்டருக்கு, 1,334 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொருளாதார மேதைகள் அடிப்பதெல்லாம் மக்கள் வயிற்றில்தான். டாடா, பிர்லா, சாராய வியாபாரி மல்லையா போன்ற பெரும் பணக்காரர்களின் நிறுவனங்கள் எல்லாம் செயல்படுவது அரசு மானியத்திலும், வரி ஏய்பிலும்தான்.
4 comments:
கொடுமை... ரொம்ப கொடுமை...
Nalla pathivu.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார், ரொம்ப கொடுமைதான் இதனால் முழுவதும் பாதிக்கப்பட போவது ஏழை எளிய மக்களே.
ada paavingalaa.....
Post a Comment