Oct 7, 2012

இன்றைய தேவை வல்லரசா? நல்லரசா?


Oct 08: கடற்படை, விமானபடை இரண்டிலும் பயன்படும் அதி நவீன பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகமாக பரிசோதிக்கப்பட்டது. இது 300 கிலோ எடை கொண்ட எரி பொருளை சுமந்து 290 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுதாக்கும் வல்லமை கொண்டது.

* இனிமேல் என்ன? நாம வல்லரசு ஆயாச்சி, இனி ரேசன் கடை கியூவில் கால்கடுக்க நிக்க வேண்டாம். அரசே ரேசன் பொருட்களை வீடுகளுக்கு டோர் டெலிவரியில் கொடுத்துவிடும்.
 
* பெண்கள் குடிதண்ணீர் வரவில்லையே என்று கவலைப்பட வேண்டாம், இனிமேல் குடிநீர் குழாயை திறந்தாள் தண்ணீருக்கு பதிலா பாலும், தேனும் வரும் நீங்கள் அள்ளி பருகலாம்.
 
* கேஸ் விலை கூடிவிட்டதே என்று இல்லத்தரசிகள் கவலைப்பட வேண்டாம். மூன்று வேலை உணவும் உங்கள் வீடுதேடிவரும், இனி வீடுகளில் நீங்கள் சமைக்க தேவையில்லை.
 
* மின்சாரம் இல்லாமல் தவிக்க வேண்டாம், இனி மின்வெட்டு என்பதே இருக்காது. மன்மோகன் சிங் வீட்டில் சுவிட்ச் போட்டால், உங்கள் வீடுகளில் லைட் எறியும்.
 
* இனிமேல் அவசர மருத்துவ உதவிக்கு போன் செய்தால், ஆம்புலன்ஸ் வேனுக்கு பதில் ஹெலிஹாப்ட்டர் வரும், உயர் தரம் வாய்ந்த மருத்துவ மனைகளில் உங்களுக்கு சிகிச்சை கொடுக்கப்படும்.
 
* காவேரி நதிநீர் கேட்டு நீங்கள் நீதிமன்றங்களை அணுக வேண்டாம், இனிமேல் காவேரி நதிநீர் உங்கள் கொல்லைபுறம் வழியாக பெருக்கெடுத்து ஓட அரசே வழிவகை செய்யும்.
 
* இனிமேல் நீங்கள் கம்மாகரையிலும், காடுகளிலும் மலம் சலம் கழிக்க ஒதுங்கவேண்டாம், உங்கள் வீடுகள் தோறும் அரசே அதிநவீன கழிப்பறைகளை கட்டி கொடுக்கும்.
 
* பிள்ளைகளை படிக்க வைக்க இனி நீங்கள் செலவு செய்யவேண்டாம், அதை அரசே செய்யும், எல்லோருக்கும் கல்வி இலவசமாகும், இனியாரும் கல்வியை காசுக்கு விற்க முடியாது என்ற நிலை உருவாகும்.
 
ஏவுகணை விட்டாச்சி, வல்லரசு ஆயாச்சி! இனிமேல் என்ன? மக்களுக்கு எல்லாம் கிடைக்கும். இந்தியா ஒளிர்கிறது நம்புங்கள்.
 
சிந்தியுங்கள்: எது மகிழ்ச்சி கொடுக்க கூடியது? பலத்த பாதுகாப்பா? வளமான வாழ்வா?
 
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

4 comments:

சித்திரவீதிக்காரன் said...

நல்ல கருத்துகள். வல்லரசு ஆவதைவிட நல்லரசு ஆவதே முக்கியம். நம்மவர்கள் சிந்திப்பார்களா?

PUTHIYATHENRAL said...

வணக்கம் தோழரே நலமா! (நல்ல கருத்துகள். வல்லரசு ஆவதைவிட நல்லரசு ஆவதே முக்கியம். நம்மவர்கள் சிந்திப்பார்களா?) உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி!

தமிழ் காமெடி உலகம் said...

மிகவும் நல்ல கருத்தை சொல்லிருக்கிறிர்கள்..ஆனால் எத்தனை பேர் இதை யோசித்து செயல் படுவார்கள் என்று தெரியவில்லை...என்ன தான் நல்லதா இப்போ யோசித்தாலும் கூட தேர்தல் சமயங்களில் அவர்கள் இலவசம் என்றும் சொன்னதும் நம்ம ஆளுங்க இப்போ படுற கஷ்டத்த மறந்து...ஆ! இலவசம் என்று எண்ணி ஓட்டு போட்டு விடுரர்களே...அதற்கு என்ன செய்வது என்று தான் புரியவில்லை...


நன்றி,
மலர்
http//www.tamilcomedyworld(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கருத்துக்கள்... உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்... (நம்மையும் சேர்த்து)