Oct 6, 2012

தமிழர்களின் தாகம்! தண்ணீர்! தண்ணீர்!


Oct 06: தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பிததற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள் கன்னட அமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இன்று காலை முதல் கர்நாடக மாநிலம் முழுவதும் கார்கள்,ஆட்டோக்கள், பஸ்கள் ஓடவில்லை. முக்கிய நகர வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டிருந்தன, இந்த போராட்டத்திற்கு முன்னாள் முதல்வரும் பா.ஜ.,வை சேர்ந்தவருமான எடியூரப்பா தனது முழு ஆதரவை தெரிவித்திருந்தார்.

தமிழனுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பதற்கு மொத்த கர்நாடகாவும் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்துகிறது. ஆனால் நாம் தமிழர்கள் யார் வயிற்றிலும் மண்ணை போட்டது இல்லை. தமிழ் நாட்டுக்கு மின்சாரம் இல்லாவிடிலும் பிற மாநிலத்துக்கு கொடுக்கிறோம். பிழைக்க வந்த அண்டை மாநிலத்துகார்களை மரியாதையாக நடத்துகிறோம். அரிசி முதல் மீன் வரை நமது பொருட்களை அண்டை மாநிலத்துக்கு கொடுக்கிறோம்.

இருந்தும் மத்திய அரசு நமது வயிற்றில்தான் அடிக்கிறது. நமது குடும்ப, ஊழல் அரசியல்வாதி கருணாநிதி, ஆணவம் பிடித்த கொள்ளைக்காரி ஜெயலலிதா இவர்களின் பிடியில் சிக்கி கிடக்கும் மதிகெட்ட தமிழக மக்கள் அவர்கள் கொடுக்கும் இலவசங்களை வாங்கி கொண்டு இரு கூறுகளாக பிரிந்து கிடக்கின்றனர். இது போதாது என்று கூத்தாடி வியகாந்த் கூடங்குளம் பிரச்சனையில் மவுனம் காத்தார். சரத்குமாரோ ஒருபடி மேலே போயி அணு உலையை திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்.

தூங்காதே தமிழா தூங்காதே! விழித்தெழு! ரவுத்திரம் பழகு! ஒற்றுமையோடு
செயல்பாடு! போலி அரசியல்வாதிகளை நம்பி ஏமாறாதே! 
தமிழ் மக்களின் தாகம் தனித்தமிழ் நாடு என்று சங்கே முழங்கு!
 
*மலர்விழி*

No comments: