வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி இவர் ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். அன்னிய நாடுகளில், இந்தியர்கள் குவித்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பாரதிய ஜனதாகட்சியின் கர்நாடகா முதல்வர் எடியுரப்பா முதல் இந்தியாவின் வருங்கால முதல்வர் என்று ஹிந்துதுவாவினரால் சித்தரிக்கப்படும் இனப்படுகொலை குற்றவாளி மோடி வரை என்று பா.ஜ.க ஊழலில் திளைத்து கிடக்கிறது.
இந்நிலையில் கட்சியின் வருங்கால பிரதமர் நரேந்திர மோடி மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான ஆணையம் தனது விசாரணையை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.
இப்படிபட்ட ஒரு ஊழல் கட்சியின் ஊழல் எதிர்ப்பு நாயகன் பாபாராம்தேவ் பற்றி சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள். பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று வடமாநிலங்களில் இயக்கம் நடத்தியவர். வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோரையும் தூக்கில் போட வேண்டும் என்று சமீபத்தில் கருத்து தெரிவித்தவர்.
முற்றும் துறந்த என்று சொல்லிக்கொள்ளும் இந்த நவீன கார்பெரெட் சாமியாரின் சொத்து மதிப்பு மட்டும் 5,000 ஆயிரம் கோடி ரூபாய். தற்போதைய ஆண்டு வருமானம் 1,000 கோடி ரூபாய். பரம ஏழை குடும்பத்தை சேர்ந்த சில ஆண்டுகளுக்கு முன் சைக்கிளில் வலம் வந்த இவர் தற்போது ஹெலிஹோப்டரில் வலம் வரும் மாயம் என்ன? இந்த பணம் எல்லாம் நேர் வழியில் வந்ததா?
இவருக்கு உத்தரகாண்ட் மாநிலம் பதஞ்சலியில் மிகப் பெரிய யோக பீடம்; 300 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை; 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள்; மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள். ஸ்காட்லாந்து நாட்டில் சொந்தமான தனித் தீவு என்று கொடிகட்டிப் பறக்கிறது இவரது கார்பெரெட் சாம்ராஜ்யம்.
"பசுவதை'க்கு மரண தண்டனை கோரும், இவரது மருந்து நிறுவனத் தயாரிப்பில், விலங்குகளின் எலும்புகள் கலக்கப்படுகிறது. ஊழல் ஒழிப்பு என்கிற ஆயுதத்தை இவர்கள் கையில் எடுப்பதன் மூலம் மீண்டும் ஆட்ச்சியை பிடிக்க சதி செய்கிறார்கள்? கடந்த காலங்களில் நடந்த காமன் வெல்த் விளையாட்டு; ஆதர்ஷ் குடியிருப்பு; 2ஜி காற்றலை ஊழல் என்று ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி – மக்களிடையே ஊழல் எதிர்ப்பு உணர்வு உருவானது. இந்த உணர்வுகளை பாரதிய ஜனதா அறுவடை செய்ய திட்டமிடுகிறது.
அவர்களின் திட்டமெல்லாம் 1975 ஆம் ஆண்டை மீண்டும் கொண்டு வரலாம் என்பதுதான். ஜெயப்பிரகாஷ் நாராயண், அப்போது – இந்திரா ஆட்சிக்கு எதிராக "முழுப் புரட்சி' இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம், இந்துத்துவா சக்திகள் – ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதே நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே அத்வானி வகைராக்களின் துடிப்பு.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள், மீண்டும் மக்கள் மன்றத்தில் கால் பதிப்பதற்கு – அவர்களிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. மீண்டும் "அயோத்தி ராமனிடம்' அடைக்கலம் புகுந்தால், மக்கள் ஆதரவு இருக்கப் போவது இல்லை என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள். இது ஹிந்துத்துவா பா.ஜ.க. பரிவாரங்களின் திட்டமிட்ட சூழ்ச்சியே அல்லாமல் வேறில்லை.
நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்
6 comments:
ஊழல் செய்து நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட நெருக்கடிநிலை என்ற சர்வதிகார ஆட்சியை செய்து இந்த நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தியாக சீலர்களை சிறையில் தள்ளிய இந்திராவிற்கு எதிரான இரண்டாவது விடுதலைபோரில் ஜெயப்ரகாஷ் நாராயண் தலைமையில் எல்லோரும் ஒன்று சேர்ந்தனர்,அதே மாதிரியான ஒரு மத்ய சர்க்கார் இப்போது ஆட்சி செய்கிறது,இதையும் எதிர்ப்பது என்பது ஜனநாயக கடமை.இதற்க்கு யார் உதவினாலும் ஏற்றுகொள்ள வேண்டும்.
ஊழல் செய்து நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட நெருக்கடிநிலை என்ற சர்வதிகார ஆட்சியை செய்து இந்த நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தியாக சீலர்களை சிறையில் தள்ளிய இந்திராவிற்கு எதிரான இரண்டாவது விடுதலைபோரில் ஜெயப்ரகாஷ் நாராயண் தலைமையில் எல்லோரும் ஒன்று சேர்ந்தனர்,அதே மாதிரியான ஒரு மத்ய சர்க்கார் இப்போது ஆட்சி செய்கிறது,இதையும் எதிர்ப்பது என்பது ஜனநாயக கடமை.இதற்க்கு யார் உதவினாலும் ஏற்றுகொள்ள வேண்டும்.
sathiyamaaka unmaithaan!
திருட்டுப்பயல்கள் காவியுடையில் மறைந்து கொண்டு தேசபக்தன்போல் மக்களை ஏமாற்றுகின்றனர். இவனுகளின் மடத்தையும்,பீடத்தையும் அரசாங்கம் சோதித்துப்பார்த்தால் கிட்னி வியாபாரம் நடப்பது கண்டுபிடிக்கலாம்
இந்தியதேச [ஓநாய்] பக்தர்கள் சொல்வது போல் மாடு அறுக்க ௬டாது மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றால்... பாபா ராம்தேவை, மோடி கும்பலைத்தான். அறுக்க நினைப்பார்கள் மக்கள்
"முதல் இந்தியாவின் வருங்கால முதல்வர் என்று ஹிந்துதுவாவினரால் சித்தரிக்கப்படும் இனப்படுகொலை குற்றவாளி மோடி "
வருங்கால முதல்வர் இல்லைங்க..வருங்கால பிரதமர் திரு.நரேந்திர மோடி என்று குறிப்பிடுங்கள். அதற்கு அடைமொழியாக வழக்கம் போல ஃபாசிஸ் ஹிந்துத்வா, இனப்படுகொலை என எந்த கதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் உங்கள் திருப்திக்காக.
Post a Comment