அதனை எதிர்க்கட்சிகளும் வரவேற்கக்கூடும். நாடு இப்போதுள்ள நிலையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுநிலையில் உள்ள ஒருவர்தான் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பதில் : வீரமணி ஐயாவுக்கு ஏன் இந்த விபரீத ஆசை. அபுல் கலாம் என்பவரால் தமிழர்களுக்கு என்ன நன்மை நடந்தது. இவர் தமிழக மீனவர்கள் பிரச்சனை முதல் கூடங்குளம் அணு உலை பிரச்சனைகள் வரை தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருபவர். மேலும் இவரை பூணூல் அணியாத பிராமணர் என்றே சொல்லலாம். சத்தீஸ்கர் பழங்குடி பிரச்சனைகள் முதல் எந்த அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளையும் பற்றி பேசாத ஒரு பொம்மை ஜனாதிபதி நமக்கு தேவையா?
செய்தி 2 : இடிந்தகரையில் போராடிவரும் மக்களை தமிழக முதல்வர் சந்திக்க வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசினார். இடிந்தகரையில் அணுஉலைக்கு எதிராக 291 நாள்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் மக்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளுக்கும் எதிராகத்தான் இடிந்தகரையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் பகுதி மக்கள் அமைதியான வழியில் 291 நாள்கள் ஒரே இடத்தில் போராடி வருகின்றனர். இவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டாமா? இத்தனை நாள்கள் நடந்துவரும் போராட்டத்தில் இதுவரையிலும் ஒரு வன்முறைகூட நடந்தது இல்லை. இந்தப் போராட்டத்தில் பெண்கள்தான் அதிகமாகப் போராடி வருகின்றனர். எனவே தமிழக முதல்வர் பெண் என்ற உணர்வுடன் இங்கு வந்து போராட்ட மக்களைச் சந்திக்க வேண்டும் என்றார்
பதில் : ஜெயலலிதா என்கிற கழுதைக்கு தெரியுமா கூடங்குளம் மக்களின் கற்பூர வாசனை. கூடங்குளம் விடயத்தில் இவர் நடத்தியது அத்தனையும் நாடகமே. கூடங்குளம் மக்கள் அணுஉலைக்கு எதிரான 291 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் நடத்தி வருவதன் மூலம் இந்தியாவுக்கு அல்ல உலகிற்கே அணு உலை எதிப்பை பறை சாற்றுகிறார்கள். கூடங்குளம் மக்கள் வரலாற்று நாயகர்களாக உலக வரலாற்றில் இடம் பெற போகிறார்கள். உலகை நாசம் செய்ய துடிக்கும் அணு உலை என்கிற பயங்கரவாததிற்கு எதிராக கூடம் குளம் மக்களின் அமைதி வழி போராட்டத்தை உலகே திரும்பிப்பார்கிறது.
இப்படிப்பட்ட மிகச்சிறந்த ஒரு மக்கள் போராட்டத்தை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும். உலக அமைதிக்காக குரல் கொடுக்கும் கூடங்குளம் மக்களை உலக சமாதானத்திக்கான நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்க வேண்டும். தமிழர்கள் இயல்பாகவே பண்பாடும் கலாச்சாரமும், உதவி குணமும் நிறைந்தவர்கள். இந்தியாவில் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை தொடக்கி வைக்கும் அநீதிகளுக்கு எதிரான சமாதானத்தின் சின்னமாகவே கூடங்குளம் மக்களை நம்மால் பார்க்க முடிகிறது.
ரௌத்திரம் பழகு
...யாழினி...
1 comment:
ஜனாதிபதி பதவியை பொம்மை பதவி என்பார்கள். அதிலும் இவர் வந்தால் சொல்லவே வேண்டாம்.
Post a Comment