Feb 27, 2012

தமிழகத்துக்கு கிடைத்த கேவலமான தலைவர்கள்!

FEB 28: இன்றைய உளறல்: ஒரு கருணாநிதி போனால் பல கருணாநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க, தமிழ் வாழ, தமிழர்கள் வாழ, திராவிடம் செழிக்க, வருவார்கள்’’ என்று சென்னையில் திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழாவில் கருணாநிதி திருவாய் மலர்ந்துள்ளார்.

அமைச்சர்களின் அவலநிலை: ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் இன்று காலை காஞ்சிபுரம்  கோயிலுக்கு வந்தனர். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் விடுதலையாக வேண்டும் என்று சிறப்பு பூஜை நடத்தினர். கேவலமான முதல்வர் கேவலமான அமைச்சர்கள்.
விலைபோன நீதி: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி கோர்ட்டு நீதிபதி, சங்கராச்சாரியார் மற்றும் இருவர் தொலைபேசியில் உரையாடியது குறித்து இன்று விசாரணை முடிந்துள்ளது. இப்படிப்பட்ட கேவலமான சாமியார் சங்கராச்சாரியாரை லோக குரு என்று சொல்லி மக்கள் ஏமாறுகிறார்களே.

நீதி கிடைக்குமா?:  போர்குற்றாவாளி ராஜபக்சேக்கு எதிராக ஐநா சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட உள்ளன. உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் ஜெனிவாவில் குவிந்து வருகிறார்கள்.  மனிதகுல விரோதி ராஜபக்சே இந்தியாவின் உதவியை நாடிஉள்ளார். இந்த மாநாட்டின் இறுதிநாளில் இலங்கை பிரச்சனை குறித்த தீர்மானம் வருகிறது. பாதிக்கப்பட்ட ஈழத்து சொந்தங்களுக்கு நீதி கிடைக்குமா?
--------------------------------------------------------------------------------------------
இன்றைய சோகம்: திருவாரூர் மாவட்டம் தியானபுரம் பகுதியை சேர்ந்தவர்  9 ம் வகுப்பு படிக்கும் மாணவன் டாஸ்மாக் மதுபானக்கடையில் பீர் வாங்கி இடுப்பில்  சொருகி வைத்துக் கொண்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக பீர்பாட்டில் வெடித்து சம்பவ இடத்திலேயே பலியானான். சிறுவர்களை இதுபோன்று பீர் வாங்கிவர சொன்ன கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
                                                                                                *மலர்விழி*  

12 comments:

Seeni said...

enna sir!
seythikalai thokuthu koduththathukku
nantri

stalin wesley said...

இன்றைய சோகம்:கொடுமை சார்

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நன்மக்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக...தமிழகத்தின் தலை எழுத்து ..கழகமே கோவில் அம்மாவே தெய்வம்..என்றொரு ௬ட்டம் ..,, தமிழை ..ஐயாவை விட்டால் காப்பாற்ற யாருமே தமிழகத்தில் இல்லை என்றொரு ௬ட்டம்,,அரசியல்வாதிகளின் பின்னால் அணிவகுத்து நிற்க்கும் மக்கள் சிந்திக்கும் நிலையில் இல்லை..,,சிந்திப்பவர்கள் தேசதுரோகிகளாக ஆக்கப்படுகின்றனர் ..,மக்களிடம் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியில் அமர்ந்து தங்களை வளப்படுத்திக் கொண்டுடிருக்கிரார்கள் ஒட்டுப்போட்ட மக்களுக்கு மன்னைத்தின்பதற்க்கும் வழியில்லை மண்னின் விலையையும் உயர்த்திவிட்டார்கள்..,, வாழ்க பாரதம் ஒழியுங்கள் இன்னாட்டுமக்கள் என்று தேசபக்திப்பாடலை பாடிக்கொண்டிருக்கிரர்கள் அரசியல்வாதிகள்..,,

Anonymous said...

r u kidding abt irulneekki subramanian(sankarachary)?he is frm and fr BRAHMINS only...!he used to be a power broker some time ago...so non-brahmin culprits like SARAVANA BHAVAN ANNACHI went after him!he has enough money to spend to protect his image thru brahmin dominated media.i believe he is an atheist by heart.

Unknown said...

அவரவரின் செயல்களுக்கேற்ற தண்டனை நிச்சயம் உண்டு......

HotlinksIN.com திரட்டி - வலைப்பதிவுகளின் சங்கமம் said...

///தமிழகத்துக்கு கிடைத்த கேவலமான தலைவர்கள்!///
தலைவர்கள் என்ற சொல்லுக்கு அருகதையானவர்கள் அல்ல அவர்கள்... தமிழகத்தைப் பிடித்த பீடைகள்...

PUTHIYATHENRAL said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தோழர் சீனி அவர்களே.

PUTHIYATHENRAL said...

வணக்கம் ஸ்டாலின் நலமா, உங்கள் வருகையும் கருத்துக்களும் உற்ச்சாகம் கொடுக்கின்றன. நன்றி.

PUTHIYATHENRAL said...

வாருங்கள் தோழர் புனித போராளி. சிந்திக்ககூடிய அருமையான கருத்துக்களை எழுதி தொடர்ந்து ஊக்க படுத்துறீங்கள்... நன்றி.

PUTHIYATHENRAL said...

///அவரவரின் செயல்களுக்கேற்ற தண்டனை நிச்சயம் உண்டு......///
வணக்கம் எஸ்தர் நலமா, சரியா சொன்னீங்கள்.... ஆனால் தண்டனையை கொடுக்க கூடியவர்கள் எல்லாம் அதற்க்கு உடந்தையாக இருப்பதுதானே இங்கே வேடிக்கை.

PUTHIYATHENRAL said...

வணக்கம் சங்கமாம் தோழரே.. நல்ல வார்த்தை பிரயோகம்... உங்கள் வருகையும் கருத்துக்களும் உற்ச்சாகம் கொடுக்கின்றன. நன்றி.

Anonymous said...

very good article. thank you.