Aug 8, 2011

மோடியின் நயவஞ்சகத்தால் ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பென்ட்!!!

august 9, ஆமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் அம்மாநில முதல்வருக்கு எதிராக பகிரங்கமாக குற்றம் சாட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சய்பட் நேற்று திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டார். கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது.

கோத்ரா நகரில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து கொளுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த மதகலவரத்தில் 750-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் அம்மாநில உயர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சயல்பட், கடந்த மார்ச் மாதம், சுப்ரீம் கோர்டில் நடந்த விசாரணையின் போது, மனு ஒன்றினை தாக்கல் செய்தார், அதில் கலவரம் நடந்து கொண்டிருந்த போது, முதல்வர் நரேந்திரமோடி தலைமையில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடந்த சட்டம் ,ஒழுங்கு கூட்டத்தில் கலந்து கொண்டேன், அப்போது கலவரத்தை தடுக்கும் முயற்சி எடுக்காமல், தாமதமாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கலவரத்தினை மேலும் பெரிதாக்கிவிட்டார் முதல்வர் நரேந்திரமோடி என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜூனாகத் நகரி்ல் எஸ்.ஆர்.பி. பயிற்சிகல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்தார். நேற்று சஞ்சய்பட் அதிரடியாக நீக்கப்பட்டார். பணிக்கு சரியாக வரமால் இருந்தது மற்றும் அரசு வாகனம் மற்றும் சலுகைகளை தவறாக பயன்படுத்தியது போன்ற காரணங்களால் அவருக்கு மொக அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு அவர் நேரிடியாக வந்து விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரை சஸ்பென்ட் செய்து குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடரான சஞ்சய்பட், முதல்வர் நரேந்திரமோடிக்கு எதிராக பகிரங்கமாக சொன்னதால், குஜராத் கலவர வழக்கு சுப்ரீம் கோர்டில் பரபரப்பினை ஏறபடுத்தியது...

2 comments:

Anonymous said...

until arrest the Modi never ever india peaceful country. by love peaceful person

Anonymous said...

DON'T WORRY MR. SANJAY BUTT. YOU ARE ONE OF THE BEUTIFUL & VALUABLE GEMS WHICH MAKES A INDISPENSABLE CROWN TO INDIAN POLICE. DONT WORRY WHAT YOU FACE IS A TEMPORARY
TEST BY SOME SAITANIC INDUCEMENT. GOD WILL GIVE YOU HONOUR FOR YOUR RIGHTIOUSNESS.

- Dalith Mainthan