கோழிக்கோடு : சுதந்திர தினத்தை கொண்டாடும் நோக்கிலும், சுதந்திர போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுக் கூறவும் பாப்புலஃ ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள, தமிழ்நாடு மாநில அரசுகள் தடைவிதித்தன. ஆனால், கேரளாவில் ஆயுதங்களை ஏந்திய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் அணிவகுப்பிற்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.
கேரள மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புனலூர், தாமரச்சேரி, மஞ்சேரி, சாவக்காடு ஆகிய இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இந்த் அணிவகுப்பை சி.பி.எம், ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் எதிர்ப்பதாகவும், பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக சுதந்திர தின அணிவகுப்புகளை நடத்துவதை அனுமதிக்க இயலாது எனவும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் தடை விதித்தனர்.
சீருடை அணிந்து அணிவகுப்பை நடத்துவது மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் என்பது சில மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வாதமாகும். ஆனால், இத்தடைகள் அமுலில் இருக்கவே அரை ட்ரவுஸரை அணிந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்கள் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்திக்கொண்டு கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தினத்தில் அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.
பத்தணம்திட்டா, கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் பல்வேறு நகரங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. தேசிய கொடியை ஏந்தி இவர்கள் நடத்திய ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பை அளித்துள்ளது.
மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அணிவகுப்புகளும், பேரணிகளும் நடத்தும்பொழுது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிகழ்ச்சிக்கு மட்டும் தடை ஏற்படுத்திய நடவடிக்கைக்கு சமூக சேவகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆலுவா, பரவூர் ஆகிய இடங்களில் ஆயுதமேந்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் பதசஞ்சலத்திற்கு போலீஸ் பாதுகாப்பை அளித்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னரே இடங்களை நிச்சயித்து அதிகாரிகளிடமிருந்து ஆவணங்கள் மூலம் அனுமதி பெற்ற பிறகே கடந்த வருடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்திவருகிறது. இதுவரை எங்கேயும் அணிவகுப்பின் பெயரால் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால், முன்னரே விளம்பரப்படுத்தாமல் சில உயர் மட்ட நபர்களின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட-சிறுபான்மை சமூக மக்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களில் தீவிரமாக பங்கேற்பதும், சமூகத்தின் தேசிய நீரோட்டத்தில் பிரவேசிப்பதையும் தடைச் செய்யும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நடத்திவரும் சதித்திட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரும் மக்கள் ஆதரவு மற்றும் பங்களிப்புடன் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்ததன் மூலம் கேரள, தமிழ மாநில அரசுகள் ஆதரவளித்துள்ளன.
** மத்திய மாநில அரசுகள் ஒரு தீவீரவாத அமைப்புக்கு பயந்து பாதுகாப்பு கொடுத்து சுதந்திர தின அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் உருவிய வாளுடன் சுதந்திர தின அணிவகுப்பு நடத்துகிறார்கள். இது என்ன சுதந்திர தின அணிவகுப்பா முஸ்லிம், மற்றும் சிறுபான்மை மக்களுக்கு விடப்படும் கலவர எச்சரிக்கையா? என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுகிறதோ அன்றுதான் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும். **
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
click and read
--> ஹிந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்.
-->
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!
--> அம்பலமாகும் காவிப்படையின் இருட்டு ரகசியங்கள். "இந்தியா டுடே"
-->யார் தீவிரவாதி ? யார் யார் தீவிரவாதி ? விடியோ,
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா?
.
இப்னு ஷாகிர்,
பேஷா எழுதரேல், ரொம்ப நன்னா இருக்கு உம்முடைய பிசிக்ஸ் நாலேட்ஜும், அவாளுடைய கிரந்தங்களில் இருந்து எடுத்துவைக்கும் செய்தியும் உம்முடைய அதி புத்தி சாளித்தனத்தை பறை சாற்றுகிறது. உம்மைப்போல் நாலு பேர் இருந்தால் எல்லாம் ஒரு வழிக்கு வந்துடும்.
ரங்கு
வாஞ்சூறார்,
இப்னு ஷாகிருக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கோ, சும்மா வெப் சைட்டுகளுக்கு லிங்க் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம்.
ரங்கு
ibnu shakir said...
அன்புள்ள மூமீன்களே.
சுவனத்தின் பாதையை எளிதாக்கிக்கொள்ளுங்கள்...
ஹராமான உணவுவகைகளை தவிர்த்துகொள்ளுங்கள்.
எச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்
------------------------------
வணக்கம் இப்பனு தாகீர், நீங்கள் வெளியிடப்பட்டுள்ள கருத்து இந்த பதிவுக்கு எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லாத ஒன்று. மேலும் நீங்கள் இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்ய இதுவல்ல தளம். ஆகவே உங்கள் கருத்துக்கள் நீக்கப்படுகின்றன என்பதை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம்.
அன்புள்ள வாசகர்களே உங்களுக்கு கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு. அதனாலேயே சிந்திக்கவும் இணையத்ததளம் இந்த கருத்து பகுதியை எங்கள் பார்வைக்கு வராமலே பிரசுரம் ஆகும்படி வடிவமைத்துள்ளது. அதை மதித்து நீங்கள் கருத்துக்கள் வெளியிடுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன். வணக்கம் - நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.
ibnu shakir said...
மூமீன்கள் தாவாப்பணி செய்ய சில எளிய வழிமுறைகள்
இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்
----------------------------------
வணக்கம் இப்பனு தாகீர், நீங்கள் வெளியிடப்பட்டுள்ள கருத்து இந்த பதிவுக்கு எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லாத ஒன்று. மேலும் நீங்கள் இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்ய இதுவல்ல தளம். ஆகவே உங்கள் கருத்துக்கள் நீக்கப்படுகின்றன என்பதை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம்.
அன்புள்ள வாசகர்களே உங்களுக்கு கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு. அதனாலேயே சிந்திக்கவும் இணையத்ததளம் இந்த கருத்து பகுதியை எங்கள் பார்வைக்கு வராமலே பிரசுரம் ஆகும்படி வடிவமைத்துள்ளது. அதை மதித்து நீங்கள் கருத்துக்கள் வெளியிடுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன். வணக்கம் - நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.
உம்மைப்போல் நாலு பேர் nadu velankathu dog
www.rss.org, www.tamilhindu.com for more details..
Post a Comment