Aug 11, 2011

துப்பாக்கி முனைகள் இன்று பேனா முனைகளாய்!

முகவரி தொலைத்த நாங்கள், அகதிகளாய் முகாம்களில்.
நேற்றுவரை நடமாடிய முகங்களைத்தொலைத்துவிட்டு...
தேடியலையும் எங்கள் தெருக்களுக்கு
எப்படி ஆறுதல் சொல்ல?

தன்மானம் போனபின்பு
பெண்மானமேனும் காக்க எண்ணிப்
புலம்பெயர்ந்த குடும்பங்கள் ..

"முடிந்தவரை புலிகளைப்பெற்றுக்கொடு"
கவிஞன் வரியை மனதிலேந்தி
கடல் தாண்டிய கர்ப்பிணி.

உள்ளதெல்லாம் போனபின்பு, உயிரெனும் மிஞ்சட்டும்
நாளை விடியல் நமக்கான தேசத்தில்
நம்பிக்கை மட்டும் உடமையாகக்கொண்டு நானும் ..

தகப்பனில்லாக் குழந்தையாய்,
தட்டிக்கேட்க ஆளில்லாமல் ..
கண்டவரெல்லாம் தலையில் தட்டிப்போகும் அவலம்.
இத்தனையும் சுமந்து ........
அனாதையாய் அகதிகளாய் நாங்கள்.
தேடியலையும் எங்கள் தெருக்களுக்கு
எப்படி ஆறுதல் சொல்ல ?

உறவுகளுக்கு வணக்கம், நம் ஒவ்வொருவரின் மனதில் கொதித்துகொண்டிருக்கும் உணர்வுகளின் ஊற்றைத் தொட்டுப்பார்க்க வேண்டிய நேரமிது. நாம் தாய்மண்ணைப் பிரிந்து வந்திருக்கிறோம். நாம் விளையாடிய தெருக்களையும், கண்ணெதிரே கொலையுண்ட சொந்தங்களையும், ஆசையாய்க் கட்டிய வீடு சிதைந்துக்கிடந்ததையும், பேணிவளர்த்த தொழிலை... விளைந்த நிலங்களை அப்படியே விட்டுவிட்டு இரவோடிரவாக உயிருக்கஞ்சி ஓடிவந்தோமே..மறக்க முடிகிறதா நம்மால்?

புலம்பெயர் வாழ்வில் மூன்றாம் தலைமுறையும் கண்டுவிட்டோம், நமது பிள்ளை களுக்கு தாய்நாட்டு அறிமுகமென்பது காணொளி வாயிலாகவும் நமது கதைப்புகளின் வாயிலாகவுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மனதில் ஈழத்தின் உணர்வுகளை வளர்த்திருக்கிறோமா என்பதை நாம் மீளாய்வு செய்ய வேண்டும். " I DONT KNOW TAMIL " என்று சொல்லுகிற சில ஈழத்து நாற்றுக்களையும் நாம் கண்டிருக்கிறோம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கிறதா? காரணம் நாற்றங்கால்களாகிய நாம் எம் பிள்ளைகளுக்கு உணர்வூட்ட வில்லையோ என்று தோன்றுகிறது.

புலம்பெயர் நாடுகளில் எம் பிஞ்சுகள் சுக வாழ்வில் ஊறிக்கிடப்பதைப் பார்க்கையில், போர்க்களமாகிப்போன சிறீலங்காவில் சோற்றுக்கும் தண்ணீருக்கும் வழியின்றிக்.. காயங்களுடன் மடிந்துக் கொண்டிருக்கும் பிஞ்சுகளின் காட்சி எம்மனத்திரையில் வந்து வதைக்கிறது. நெகிழ்ந்த உடையை அனிச்சையாய் எம் கைகள் சரிசெய்கையில், மானத்திற்காகக் கதறிய எம் பெண்டுகளின் கதறல் செவிகளில் ஒலிக்கிறது. மறத்தமிழச்சியாய் போர்முனையில் நின்ற இசைப்பிரியா...மானங்காக்க அவளின் ஒவ்வொரு அணுவும் தவித்திருக்கும், சிங்களப் பேய்களின் வேரறுக்க அவளின் இரெத்தம் கொதித்திருக்கும். ஈழத்தில் பெண்ணாய்ப் பிறந்ததைத் தவிர அவர் செய்த பாவமென்ன ?

செல்லுமிடமெல்லாம் எம்சொந்தங்களைச் சந்திக்க மாட்டோமா என ஏங்கித் தவிக்கிறோமே நாம் இந்நிலைப்பட்டதன் சூத்திரங்கள் யார்? சிறப்புற்றிருந்த எம் தமிழர் வாழ்வைச்சீரழித்த முள்வேலிகளில் எம் மக்களை சிதைத்துக்கொண்டிருக்கும் வெறியர்களை உலக அரங்கின் முன் நிறுத்தியிருக்கிறோம். நம் இனத்தின் உரிமைகளை, தாய்மண்ணின் மீதான நமது உரிமையை வென்றெடுக்க தலைமுறைக் கடந்தும் போராடிக்கொண்டிருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கு தாய்நாடு தமிழ்ஈழம் என்பதை உணர்த்த நாம் கடமைப்பட்டவர்களாவோம்.

பல துப்பாக்கிமுனைகள் இன்று பேனாமுனைகளாய் வடிவம் தரித்துள்ளன. ஈழத்தின் வரலாற்றை அறிய நம் பிள்ளைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்போம். புலம்பெயர்தேசம் என்பது எம் சொந்ததேசமல்ல, தமிழனின் தலைநிமிர்ந்த வாழ்வு தாய்மண்ணில்தான்
கொலைகாரன் மகிந்த வின் உருவம் தொலைக்காட்சியில் வரும்போதெல்லாம், இருவிரல்களைத் துப்பாக்கியாக்கி சுடும் என் அஞ்சுவயது மகளின் மனநிலைதான் எனக்கும் வருகிறது.

ரௌத்திரம் பழகு
ஈழவள் யாழினி

7 comments:

vidivelli said...

manathai valikkachcheyyum pathivu.
pathivukku vaalththukkal..

Anonymous said...

Thank u yalini it's very important now

Anonymous said...

Manathai urukkum pathivu yellorum sinththikka vendiya pathivu

Anonymous said...

Muthalil Tamil naattai inthiyaavil irunthu piriththu thank naadaaga maatranum aduththu thaan eelam yellaam

Anonymous said...

35 varuda pooraattaththai aliththa nayavanjaga narigal inthiyargal. Inthiyargal yenpathil eni tamilargal serthi yillai. India yenpathil eni Tamil Nadu seeraathu ithu viraivil nadakkum

Anonymous said...

Thank u yaliini, it's tru

Anonymous said...

Nalla pathivu vaalththukkal - by raja