AUG லண்டன்: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கறுப்பர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து லண்டனில் உருவான கலவரம் நான்கு தினங்களை கடந்த வேளையில் பிரிட்டனின் இதர நகரங்களுக்கும் பரவியுள்ளது. கோபம் கொண்ட கறுப்பர் இனமக்கள் திரள் போலீஸ் வாகனங்களையும், கட்டிடங்களையும் தகர்த்து தீவைத்துக் கொள்ளுத்துவதும், கொள்ளையடிப்பதும் தொடர்கிறது.
வடக்கு லண்டனில் நாட்டன்ஹாமில் சனிக்கிழமை இரவு கலவரம் வெடித்தது. பின்னர் லண்டன் முழுவதையும் ஏறத்தாழ அடிபணியவைத்த கலவரம், லிவர்பூல், பிரிஸ்டோல், பர்மிங்காம் ஆகிய சமீப நகரங்களுக்கும் பரவியது அதிகாரிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது விடுமுறைகாலத்தை இத்தாலியில் கழிப்பதற்காக சென்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் உடனடியாக தனது பயணத்தை ரத்துச்செய்துவிட்டு நேற்று முன் தினம் நாடு திரும்பினார்.
உயர்மட்ட அதிகாரிகளுடன் நிலைமைகளை குறித்து விவாதித்த அவர் கோடைக்கால விடுமுறைக்காக கலைந்த பாராளுமன்றத்தின் அவசர கூட்டத்தை கூட்டவும் தீர்மானித்துள்ளார். கலவரத்தை அடக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார். கலவரத்தை அடக்குவதற்கும் மேலும் 15 ஆயிரம் பாதுகாப்பு ராணுவத்தினரை வரவழைப்பதாக லண்டன் மெட்ரோபாலிடன் போலீஸ் தெரிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 520 பேர் கைதுச் செய்யப் பட்டுள்ளனர். கலவரம் இதர நகரங்களுக்கும் பரவுவதையடுத்து இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்து-நெதர்லாந்து நல்லிணக்க கால்பந்துபோட்டி ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை ரத்துச்செய்ய வேண்டாம் என இங்கிலீஸ் கிரிக்கெட் போர்ட் தெரிவித்துள்ளது.
கலவரம் துவங்கியதிலிருந்து முதல் மரணம் நேற்று பதிவுச் செய்யப்பட்டது. தெற்கு லண்டனில் க்ரொய்டனில் இச்சம்பவம் நிகழ்ந்தது. துப்பாக்கி குண்டு தாக்கப்பட்ட நிலையில் வாகனம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமுன் இறந்துவிட்டதாக போலீஸ் கூறுகிறது.
கறுப்பு இனத்தவருடனான அரசு பாரபட்சம்தான் கலவரத்திற்கு மூலக்காரணம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Bluff. Its not True.
கறுப்பு இனத்தவருடனான அரசு பாரபட்சம்தான் கலவரத்திற்கு மூலக்காரணம்.////உண்மை அதுவல்ல!கொல்லப்பட்ட ஆபிரிக்க கறுப்பினத்தவர் போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமாக தேடப்பட்டவர்,மடக்கிப் பிடிக்க முயற்சித்த போது துப்பாக்கியால் காவல் துறையினரை தாக்க(சுட)முயற்சித்தார் என்பது குற்றச்சாட்டு!குற்றம் இழைக்கப்பட்டிருப்பின் நீதிமன்றின் மூலம் நடவடிக்கை,காவல் துறையினருக்கு எதிராக எடுக்கக் கூடிய வாய்ப்பு உண்டு!ஜனநாயகம் கோலோச்சும் நாடு அது!வேலையற்ற இளைஞர்கள் விரக்தி காரணமாக கலவரங்களை ஆரம்பித்து கொள்ளையடித்தனர் என்பதே உண்மை!
Post a Comment