சென்னை, ஆக. 12- இடஒதுக்கீட்டை எதிர்க்கும் “ஆரக்ஷான்” படம் இன்று இந்தியா முழுவதும் ரிலீசானது. தமிழகத்திலும் இப்படம் வெளியாகியுள்ளது.
“ஆரக்ஷான்” படம் திரையிடப்படுவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். “ஆரக்ஷான்” படம் ஓடும் சத்யம் தியேட்டர் முன்னால் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் திரண்டார்கள்.
இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆரக்ஷான் படத்தை தடை செய், பெரியார், அம்பேத்கார் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான ஆரக்ஷான் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
அனைவரும் தியேட்டருக்குள் நுழைய முயற்சித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.
மயிலாப்பூர் ஐநாக்ஸ் தியேட்டரிலும் ஆரக்ஷான் படம் திரையிடப்படுவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகிகள் இளஞ்செழியன், வக்கீல் எழில் கரோலின், பகலவன், குமரப்பா உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment