ஆகஸ்ட் 9, மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கைது செய்ய்பட்ட பெண் சாமியார் சாத்விபிரக்னயா மீதான ஜாமின்மனுவை கோர்ட் தள்ளுபடிசெய்தது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி மகாராஷ்டிராவி்ன் மலேகான் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாயினர். பலர்படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா குற்ற அமைப்பு தடுப்பு கட்டுப்பாட்டு (எம்.சி.ஓ.சி.) போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் இந்து அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்விபிரக்னயா சிங் தாகூர்,அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த சமீர்குல்கனி உள்ளிட்ட எட்டுபேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு மகாராஷ்டிரா குற்ற அமைப்பு தடுப்பு சிறப்பு கோர்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சாத்விபிரக்னயா, எம்.சி.ஓ.சி.ஏ கோர்டில் ஜாமின் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் தனது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்வும் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளஇருப்பதால், ஜாமினில் விடுவிக்கும்படிகோரியிருந்தார். அவர் சார்பில் வக்கீல் ராமேஷ்வர் கெய்த் ஆஜரானார். அவர் வாதிடுகையில், பிரக்னயா உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியான பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவருக்கு சிகிச்சையளிக்க இரண்டு மாதங்கள் ஜாமின்அளி்க்க வேண்டும் என கூறயிருந்தார். இதற்கு அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். முடிவி்ல் நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல பதிவு...
தொடர வாழ்த்துக்கள்..
http://sempakam.blogspot.com/
இது ஆண் சாமியாரா பெண் சாமியாரா என்றே தெரியவில்லை.
செயல்களைப்பொருத்து அந்த முகத்தின் அழகை அதிகரிக்க வைப்பதும், கொடூரத்தை வெளிக்கொண்டு வருவதும் இறைவனே.
- தலித் மைந்தன்
Post a Comment