Jul 16, 2011

பிளாஸ்டிக் இல்லாத உலகம் நாமும் போராடுவோம்!

JULY 17, மேட்டுப்பாளையம்: பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்கக் கோரி, சைக்கிள் வீரர் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை, பிரசார பயணம் மேற்கொண்டார்.

ஊட்டி சைக்கிள் வீரர் பிரசாத், நேற்று மேட்டுப் பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொண்டார். வழிநெடுக பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் இல்லாத நீலகிரியை உருவாக்கக் கோரியும் பிரசாரம் செய்தார்.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு, அனைத்து வணிகர் சங்க அமைப்பாளர் ஹபிபுல்லா தலைமை வகித்தார். நகராட்சி வியாபாரிகள் சங்கச் செயலாளர் ஷாஜஹான், சிட்டி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜுலு கொடியசைத்து துவக்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் வதூத், சைக்கிள் வீரர் அறிவழகன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். யுவராஜ் வரவேற்றார். ஜாகீர் உசேன் நன்றி கூறினார்.

7 comments:

மகேந்திரன் said...

பிளாஸ்டிக் இல்லாத உலகை நிச்சயம் உருவாக்கவேண்டும்
என்பது இப்போதைய அவசியம்.

கூடல் பாலா said...

இன்றைய உலகின் அவசர தேவை பிளாஸ்டிக் ஒழிப்பு ....

ரிஷி said...

பிளாஸ்டிக்கை அரசாங்கம் மனது வைத்தாலன்றி ஒழிப்பதற்கு சான்ஸே இல்லை. மக்களின் கையில் எதுவுமே இல்லை. பாலிதீன் பைகளும், குளிர்பானங்களும்தான் சூழலை வெகுவாகக் கெடுக்கின்றன.

Anonymous said...

பிளாஸ்டிக்கில் ஒரு வகையான பாக்டீரியாவை கலந்து உற்பத்தி செய்தால் பிளாஸ்டிக் உடனடியாக மண்ணில்
மக்கும் தன்மையை பெரும் என்ற செய்தி உண்மையானால் அதை அரசாங்கங்கள் ஊக்கப்படுத்தவேண்டியதுதானே
எது எக்கேடு கேட்டாலும் மக்காத பிளாஸ்டிக் மொத்த மனித சமுதாயத்துக்கும் கெடுதல். இதிலாவது மதத்தை
கலக்காமல் பொது நல சிந்தனையோடு செயல்பட வேண்டும். - தமீம்

PUTHIYATHENRAL said...

வணக்கம் மகேந்திரன் சார், எப்படி இருக்கீங்கள், உங்களது கருத்துக்களுக்கு நன்றி மீண்டும் வாருங்கள்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் பாலா சார், எப்படி இருக்கீங்கள், உங்களது கருத்துக்களுக்கு நன்றி மீண்டும் வாருங்கள். உங்கள் இணையதளத்தை படித்தேன் கருத்து சொல்லலாம் என்று கருத்து எழுதி போஸ்ட் செய்தால் கூகிள் id கேட்டது அதையும் கொடுத்து போஸ்ட் செய்தேன் இருந்தாலும் அது போஸ்ட் ஆகவில்லை உங்கள் கருத்து பகுதியை எளிமையாக்கி வைக்கும்படி கேட்டு கொள்கிறேன். நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் ரிசி சார், எப்படி இருக்கீங்கள், உங்களது கருத்துக்களுக்கு நன்றி மீண்டும் வாருங்கள்.