Jul 17, 2011

மும்பை குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா தொடர்பா?

JULY 18, புதுடெல்லி:மும்பை தொடர் குண்டு வெடிப்பிலும், ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிலும் ஒரே வெடிப்பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளது என கருதப்படுகிறது.

அம்மோனியம் நைட்ரேட், குரூட் ஆயில் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வெடிக்குண்டுதான் மும்பை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளின் பயன்பாடும் கண்டறிந்தால் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுதான் மும்பையிலும் வைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறலாம்.

மத்திய தடவியல் சோதனைக்கூடத்தில் நடத்திய பரிசோதனை அறிக்கை ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பயன்படுத்தப்படவில்லை என கூறிய பொழுதிலும், ஓபரா ஹவுஸில் வெடித்த குண்டின் சிதிலங்களை கலினா தடவியல் விஞ்ஞான சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டதை நிராகரிக்கவில்லை.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் அரசு தடவியல் சோதனைக்கூடத்தின் அறிக்கையை முடிவாக கொள்ளவேண்டாம் என புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டதால் தான் ஓபரா ஹவுஸில் இவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என மும்பை போலீஸ் கருதுகிறது. 2007 பெப்ருவரியில் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ், அம்மோனியம் நைட்ரேட், குரூட் ஆயில் ஆகிய உபயோகித்த வெடிக்குண்டு பயன்படுத்தப்பட்டது.

ஆனால்,இவ்விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்க ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிச்செய்யவேண்டும். ஆகையால், கலினா தடவியல் சோதனைக் கூடத்தின் விரிவான அறிக்கைக்காக காத்திருப்பதாக மும்பை தீவிரவாத எதிர்ப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அம்மோனியம் நைட்ரேட்டை ஆர்.டி.எக்ஸில் கலந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியதையும் போலீஸ் நிராகரிக்கவில்லை.

டி.என்.டி வெடிப்பொருளை உபயோகித்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி கருதுகிறது. பாறையை தகர்ப்பது உள்ளிட்டவைகளுக்கு உபயோகிக்கப்படும் இந்த வெடிப்பொருளின் சக்தி குறிப்பிட்ட இடத்தில் குறைவாக இருக்கும்.ஆனால் ஆர்.டி.எக்ஸ் பெரும் சேதத்தை விளைவிக்கும். ஓபரா ஹவுஸ், ஜவேரி பஸ்ஸார், தாதர் ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் எல்லாம் பெரும் சேதம் விளைந்துள்ளது.

குண்டுவெடிப்பிற்கு அம்மோனியம் நைட்ரேட்டின் உபயோகத்தை அனைத்து ஆய்வுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.குண்டுவெடிப்பிற்கு உபயோகித்த டைமர் குறித்து மும்பை ஏ.டி.எஸ் இதுவரை இறுதி முடிவுக்கு வரவில்லை. மோட்டார் சைக்கிளில் குண்டை பொருத்திய முறையையும் போலீஸ் பரிசோதித்துவருகிறது. மலேகானிலும், மொடாஸாவிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகளிலும் மோட்டார் சைக்களில் தான் குண்டு வைக்கப்பட்டிருந்தது.

1 comment:

Anonymous said...

IN MOST OF OUR INTELLIGENT DEPARTMENT AND NATIONAL INVESTIGATION DEPT. THE OFFICERS ARE HINDUS. WE DONT EXPECT FAIR AND JUST INVESTIGATION ON THIS ISSUES. FEW GOOD ONES LIKE MR.KARKARE ARE THERE BUT THEY WILL BE ROOTED OUT LIKE THEY PLOTTED AND KILLED KARKARE. THERE IS NO SIGN FOR THE PROGRESS OF MY GOOD NATION IN NEAR FUTURE. Pallathoor Navalan