ஜூலை 26, புது தில்லி : 2-ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்தது.
"உலகம் முழுவதுக்கும் அப்பழுக்கற்ற நேர்மைக்கும், கண்ணியத்துக்கும் உதாரணமாகத் திகழ்பவர் பிரதமர் மன்மோகன் சிங். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக கேள்வியெழுப்பியவர் என்று சொன்னால் அது பிரதமர் மன்மோகன் சிங் ஒருவர்தான். அவரது கண்ணியத்தைக் குறைக்க முயல்வது சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றதாகும்' என்று காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.
அலைக்கற்றை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ. ராசா கூறியவை அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அவரது வாதமாகும். பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ளவர் ஒரு அமைச்சரல்ல, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறியுள்ள கருத்துகளுக்குத் தேவையில்லாமல் அதீத முக்கியத்துவம் கொடுத்து அதை
வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இந்தியா முழுவது தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள். இதனால் ஹிந்துத்துவாவின் அரசியல் முகமூடியான பாரதிய ஜனதாவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் வெகுவாக சரிந்துள்ளது. தாங்கள் இழந்த செல்வாக்கை நிலைநிறுத்தவே இப்படி அபாண்டமான குற்றச்சாட்டை சொல்லிவருகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment